வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்...
சங்கர ஸ்ரீனிவாசன், சி.ஓ.ஓ., Realtycompass.com
வீடு வாங்குவது என்பது பெரும்பாலான மக்களின் லட்சிய மாகவும், கனவாகவும் இருக்கிறது. வீடு வாங்குவது என்பது, ஒரு நபர் தனது வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கிய முடிவுகளில் ஒன்று. தெரியாத்தனமாக தவறான இடத்தில், தவறான பில்டரிடமிருந்து வீடு வாங்கி விட்டால் அது பெரும் சுமையாக மாறிவிடும்.
அதுவும் சென்னை முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் கட்டும் போதே, சரிந்துவிழுந்து 61 பேர் பலியான சம்பவத்துக்குப்பின் வீடு வாங்குவதில், அதிலும் குறிப்பாக, ஃப்ளாட் வாங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது. வீடு வாங்கும்போது பின் வரும் 10 விஷயங்களைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள்.
1.கட்டுமான நிறுவனத்தின் தரம்!
கட்டுமான நிறுவனத் தின் தரம் / நம்பகத் தன்மையைத்தான் முதன்மையாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான கட்டுமான நிறுவனத்திடமிருந்து வீடு வாங்குவது, வாங்குபவரின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும். கடந்த காலங்களில் அந்தக் கட்டுமான நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை நேரில் சென்று பாருங்கள். எவ்வளவு திட்டங் களை அந்த பில்டர் சரியான நேரத்தில் முடித்து வழங்கியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அத்துடன் அவர் கட்டித்தந்துள்ள வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கட்டுமானத் தரம், வாடிக்கையாளர் சேவை, அந்தத் திட்டங்களில் உள்ள அனுமதி மீறல்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளுங்கள்.
