Pages

Saturday, October 11, 2014

வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் !


.
தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

அடர் சிவப்பு – cramoisy

அடர் நீலம் - perse / smalt

அடர் மஞ்சள் - gamboge

அயிரை/ அசரை - sandy colour

அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic

Toll Free Numbers (India)இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்



345378o




இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ,அமைப்புகள் ,தொழிற்சாலைகள் 
ஆகியவற்றின் இலவச எண்கள் நான் பார்த்தது நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் . 
குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை  ,கோரியர்ஸ் ,நலபிரிவு ,கல்வி நிறுவனங்கள் ,உணவு விடுதிகள் , பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே ....

செங்குத்து தோட்டம்


செங்குத்து தோட்டம்(Vertical Garden)

நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு  இந்த செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது  20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.
செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது

சுய தொழில்கள் சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி

ஒரு சமையல் எண்ணெய் உற்பத்தி யூனிட் தொடங்க உத்தேசித்துள்ளீர்களா? நீங்கள்.. இது ஒரு சுலபமான விஷயம் அல்ல என்று மனதில் கொள்ள  வேண்டும்,


சந்தை வாய்ப்பு! 
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், மதுரை திருச்சி திண்டிவனம் விழுப்புரம் , சென்னைஈரோடுசேலம்,கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

சுய தொழில்கள் சந்தன கம்ப்யூட்டர் சாம்பிராணி


கமகமக்கும் சந்தன கம்ப்யூட்டர் சாம்பிராணி
நெருப்புத் துண்டுகளில் சாம்பிராணித் தூள் தூவி புகைப் போடும் பழக்கம் இன்று கிராமங்களில் கூட மறைந்துப் போய்விட்டது. ‘கையில காசு வாயில தோசை என்பது போல் இந்த யுகத்திற்கேற்ப கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் வந்துவிட்டன.
சுப காரியங்கலில் தொடங்கி பல நிகழ்ச்சிகள் வரை கம்ப்யூட்டர் சாம்பிராணியின் மணம் கமகமக்கிறது. அதனால் கம்ப்யூட்டர் சாம்பிராணியில் பை நிறைய வருமானம் ஈட்ட முடியும். அதிலும் சந்தனத்தூள் கலந்து தயாரிக்கப்படும் கம்ப்யூட்டர் சாம்பிராணிகளுக்குத் தான் மவுசு அதிகம்.

சுய தொழில்கள்..பென்சில் தயாரிப்பு

கிராபைட்,என்பது இது பூமியில் இருந்து கிடைக்கும் கனிம வளம்.இது நான்கு வகைபடும்.நிலகரிய விட உயர்ந்தது  கிராபைட் எப்போதாவது தனிமைப்படுத்தி காணப்படுகிறது; இது பொதுவாக களிமண் மற்றும் இரும்பு ஆக்சைடு கலந்து, அல்லது ஒரு பாறை ஒரு பகுதியாக உள்ளது. இந்த மாதிரி ஒப்பீட்டளவில் தூய மற்றும் நான்  பண்புகள் காட்டுகிறது. கிராபைட் ஏனெனில் அதன் அடித்தள பிளவு மற்றும் வழுக்குகிற இயற்கையின் ஒரு நல்ல மசகு எண்ணெய் செய்கிறது. இது படிவ பாறைகள் உள்ள carbonaceous பொருள் உரு மாற்றம் இருந்து உருவாக்கும் மிகவும் பொதுவாக (எ.கா. கிராஃபைட் schists) காணப்படுகிறது.

.கிராபைட்

Friday, October 10, 2014

'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்:


'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்: அரபி மொழியில் கொண்டலாத்திப் பறவையைக் குறிக்கிறது

கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர் வைக்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் முதல் வலுவான புயலுக்கு 'ஹுத்ஹுத்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

#குலசை_தசராவும் #மனித_நேயமும்!!




இந்தியாவில் நடைபெரும் மிகப் பிரமாண்டமான தசரா விழா மைசூருக்கு அடுத்து குலசையில் தான் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது..
ஒரே நாளில் (பத்தாம் நாள்) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சிறிய ஊரில் கூடுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள்.. இந்த கூட்டத்தை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஊர் இது.. இருப்பினும் ஊர் மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் வரும் கூட்டத்திற்கு வேண்டிய வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கிறார்கள்..

பசுப் பால்பண்ணை

 Edit

90058232பசுப் பால் பண்ணை – பயனுள்ள‍ தகவல்களுடன் ஓர் அலசல்
பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன
> ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
>ஒரு பருவக்காலத்தில் பால்தரும் நாட் கள் / பால் உற்பத்திக் காலம்
> பால் உற்பத்தி நிலைத்தன்மை
> முதல் கன்று ஈனும் வயது
> சினைப் பருவம்
> பால் வற்றிய நாட்கள்
> அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடை யே உள்ள இடைவெளி
> இனப்பெருக்கத் திறன்
> தீவனம் உட்கிரகிக்கும் நாள்
> நோய் எதிர்ப்புத் திறன்

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா?-2


11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

Thursday, October 9, 2014

நாளை உலக சித்தர் தினம்: நோயின்றி வாழ உறுதி கொள்வோம்



சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவு கொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

இவர்கள் இன்னும் இவ்வுலகில் பல வடிவங்களில் மனித உருவில் கலந்து மனிதர களின் துயரை களைந்து தங்களின் மகா சக்தியை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர் சித்தர்கள். எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.

‘ க’ வில் தொடங்கும் தமிழ் பழமொழிகள்

கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

அ என்ற எழுத்தில் தொடங்கும் பழமொழிகள்......



1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

2. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
3. அகல இருந்தால் பகையும் உறவாம்.
4. அகல உழுகிறதை விட ஆழ உழு.
5. அகல் வட்டம் பகல் மழை.
6. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
7. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
8. அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா?-1




1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

Wednesday, October 8, 2014

7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...


Tuesday, October 7, 2014

வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி


Monday, October 6, 2014

தொழில் நுட்பங்கள் சார்ந்த தொழில்கள் பப்பாளி:






பப்பாளியைப் பொறுத்த வரை,தமிழ் நாட்டில் 12 மாதங்களும் பரவலாக அதிக அளவில் விளையக் கூடிய பழமாகும். அதிக அளவில் கிடைக்கக் கூடிய பப்பாளி பழத்தைக் கொண்டு பல வகையான சுய தொழில்கள் செய்வதெப்படி என்பதைப் பற்றி இங்கு காணலாம்.
பப்பாளி

பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி
பப்பாளி உடனடியாகப் பரிமாறும் பானம்
பப்பாளி – அன்னாசிப்பழம் உடனடியாகப் பரிமாறும் பானம்
பப்பாளி ஊறுகாய்
பப்பாளி பழக்கூழ்
பப்பாளி பழக்குழம்பு
பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி

Sunday, October 5, 2014

நல்ல வருமானம் தரும் கீரை சாகுபடி


கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.

கீழாநெல்லி:



இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

குடைமிளகாய் சாகுபடி







பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

நாற்றங்காலுக்கு 50 சதவீத நிழல்வலை போதுமானது. ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுக்களை குழித் தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நிரப்ப வேண்டும்.
ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் குண்டு மிளகாய் விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

மாடித் தோட்டம் ஒரு மகத்தான மகசூல்!


'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.