Pages

Friday, December 19, 2014

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. 

Thursday, December 18, 2014

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம்.

விலை உயர்ந்த குடியிருப்புகள் - சென்னை முதலிடம்!


இந்தியாவில் சில வருடங்களாகவே குடியிருப்பு வர்த்தகமானது மந்தமாக இருந்துவருகிறது. இருப்பினும் சில நகரங்களில் குடியிருப்புகளின் விலை அதிகரித்து வருவதாகவும், குடியிருப்புகளின் விலை அதிகரித்துள்ள 26 பெரிய நகரங்களின் வரிசையில் சென்னை முதல் இடத்தில் இருப்பதாகவும் நேஷனல் ஹவுஸிங் பேங்க் தெரிவித்துள்ளது.

உங்கள் நேரத்தை திருடுவது யார்!


 உங்கள் நேரத்தை திருடுவது யார்!
ஆனால். நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும் தான். ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம்.
நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கையில் இருக்கிறது. இதில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு மீதமிருக்கும் நேரம் என்ன? தேவையில்லாமல் நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? அதனை எப்படி சரியாக செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ...

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

மும்பை துறைமுகத்தில் அமெரிக்க கறிக்கோழி 'லெக்பீஸ்':

மலிவு விலையில் இறக்குமதியா என உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கறிக்கோழி இறக்குமதிக்கான தடையை, உலக வர்த்தக அமைப்பு ரத்து செய்ததை அடுத்து, மும்பை துறைமுகத்துக்கு, அமெரிக்க கறிக்கோழி, 'லெக்பீஸ்' கன்டெய்னரில் வந்து உள்ளது.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் !

ஏற்றுமதி தொழில் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே தமிழர்கள் கிரேக்கத்துக்கு சென்று வணிகம் செய்ததையும், வேறு பல நாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றதையும் வைத்துப் பார்க்கும்போது, நமது ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டாயிரம் வயதுக்கு மேல் என்று சொல்லலாம்.

அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!


 அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!
                   
கடந்த ஆறு மாதங்களாக மின் வணிக நிறுவனங்கள் (ஆன்லைன் / இ-காமார்ஸ்) தேசிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம்.

Wednesday, December 17, 2014

லட்சங்களில் சம்பளம் தரும் ஹோட்டல் துறை படிப்புகள்!

வேலை என்பது மனநிறைவுடனும், ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம், கைநிறைய சம்பளமும் கிடைக்க வேண்டும். இதற்கு எந்தப் படிப்பு படிக்கலாம் என்று கேட்கிறவர்கள் ஹோட்டல் துறை படிப்பை கட்டாயம் ஆராயலாம்.

Tuesday, December 16, 2014

ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவை விட அதிக தங்கம் வைத்திருக்கும் 3 கேரள நிறுவனங்கள்...

கொச்சி: சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரலேயாவை விட கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் அதிக தங்கம் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியர்களில் பலர் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். அதிலும் கேரளாவில் 2 லட்சம் பேர் தங்கம் தொடர்பான துறையில் தான் வேலை செய்கிறார்கள். கேரளாவில் நடக்கும் திருமணங்களில் பெண்கள் கழுத்தில் இருந்து வயிறு வரை தங்க நகை அணிவதை பார்க்கலாம். இந்நிலையில் தான் கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் அளிக்கும் நிறுவனங்களிடம் உள்ள தங்கம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

Monday, December 15, 2014

10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.