Pages

Thursday, July 23, 2015

வெண்டைக்காய் மோர் குழம்பு


வெண்டைக்காய் மோர் குழம்பு





தேவையான பொருட்கள்: 
புளித்த தயிர் - 1 கப் 
வெண்டைக்காய் - 4-5 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. 

இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. 

இயற்கை எழில் குறையாத மாஞ்சோலை


திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.

Wednesday, July 22, 2015

பழச்சாறு தயாரிப்பு! சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்!


வாரம் ஒரு தொழில்! - பழச்சாறு தயாரிப்பு!


ஆண்டுக்கு எட்டு மாதம் வெயில் சுட்டெரிக்கும் நம்மூரில் சில்லென்று கிடைக்கும் குளிர்பானங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறு தயாரிப்பு பிஸினஸ்தான் இப்போதைக்கு செம ஹிட்!

Tuesday, July 21, 2015

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்!

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ

(மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-21)

சென்னையில்,  "அவனா எம்டனாச்சே... !" என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள்,  இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?


''வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் நன்றாகவே உஷார் படுத்திவிட்டீர்கள்'' - இப்படி 'அவள்' வாசகிகள் ஏகப்பட்ட பேரின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கிறோம்.கூடவே, ''இதேபோல் வீட்டில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன் பாட்டு முறைகளை பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள். இதனால், பல லட்சம் பேர் பலனடைவார்களே?!'' என்று உரிமையோடு வேண்டுகோள் கள் வேறு.
வாசகிகளின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுவது தானே 'அவள்' கடமை.
ஏ.சி-க்கு அடுத்தபடியாக ஃப்ரிட்ஜிலிருந்தே இதோ, கச்சேரி ஆ...ர...ம்...ப...ம்...

Sunday, July 19, 2015

தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

காலிக்குடங்கள்... காத்திருப்பு... தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

மெட்ரோ சென்னையில் தண்ணீர் பற்றாக் குறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன் சாலைகளில் பயணிப்பதும் காத்திருப்பதும், நெடுநேரமாகி வரும் தண்ணீர் லாரிகளை மொய்ப்பதும் அன்றாட அவலமாகியிருக்கிறது .
அதிலும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தரமணி, காசிமேடு, குரோம்பேட்டை   உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் வயிற்றுப் போக்கு பாதிப்பால் பொதுமக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமையும்  நிகழ்ந்து வருகிறது.

'வத்தல் தாத்தா

ரூ.300 முதலீட்டில் ரூ.30 லட்சம் வருமானம்: அசத்தும் 'வத்தல் தாத்தா'!

'வத்தல் தாத்தா' யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அளவுக்கு மதுரை, செல்லூர் வட்டாரத்தில் டி.பி.ராஜேந்திரன் மிகவும் பிரபலம். காரணம், இவரது திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி.
78 வயதான ராஜேந்திரன் இந்த வயதிலும், இளைஞர்களைப் போன்று சுறுசுறுப்பாக உழைத்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு காய்கறி சந்தைகளில் ஆரம்பமாகும் இவரது வேலைகள், இரவு கம்பெனி வரையிலும் தொடர்கிறது. வத்தல் போடுவதற்கான சுண்டைக்காய் வாங்குவதற்காக, ஆந்திரா, பென்னாகரம், சத்தியமங்கலம், மிதுக்கங்காய்க்கு விளாத்திகுளம், மாங்காய்க்கு பெரியகுளம், மற்ற காய்கறிகளுக்கு மாட்டுத்தாவணி, பரவை என பம்பரமாய் சுற்றுகிறார்.