Pages

Sunday, October 27, 2013

பாஸ்லி ஆண்டு - என்றால் என்ன?


ஒரு பாஸ்லி ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30 அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள் இருக்கும் ஒன்று கரீப் (Kharif) எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று ராபி (Rabi). இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் ஒரு வருட நிலவரியை வசூலிக்க வேண்டும்.

கரீப் (Kharif)
கரீப் காலம் என்பது தென்மேற்கு பருவமழை காலத்தை பொறுத்தது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மே மாதம் கேரளத்தில் தொடங்குகிறது. இதுவே கரீப் காலத்தின் துவக்கமாகும். தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் வரை வடஇந்தியாவில் பொழிவதால், கரீப் பயிர்கள் மே மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை பயிரிடப்படும். எனவே மே-அக்டோபர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பயிரிடும் விவசாயப் பயிர்களை கரீப் பயிர்கள் என்பர்.
நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, சோயாபீன்ஸ், நிலக்கடலை, பருத்தி ஆகியவை முக்கியமான கரீப் பயிர்களாகும்.
ராபி (Rabi)
ராபி காலம் என்பது வடகிழக்கு பருவமழை காலத்தை பொருத்தது இந்தியாவில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தொடரும். இம்மழை கிழக்கு மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஓடிசா, மேற்கு வங்கம் வரை பொழியும். தமிழகத்திற்கு அதிக மழை தரும் ஒரே மழைக்காலம் இது தான்.
கோதுமை, கடுகு, பருப்பு வகைகள், கடலை வகைகள், பார்லி போன்றவை பயிரிடப்படும். தமிழகம், ஆந்திரப் பிரதேசத்தில் நெல் பயிரிடப்படும்.

No comments:

Post a Comment