Pages

Saturday, April 18, 2015

அவியல்


தேவையான பொருட்கள்: 
காய்கறிகள் - உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பூசனிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பட்டாணி, அவரைக்காய், கத்தரிக்காய் -  1/2 கிலோ அளவு  ( இனிப்பு, புளிப்பு, இலைக்காய்கறிகள் தவிர்க்கவும்)
தேங்காய்  -  1 மூடி
பச்சைமிளகாய்  -  6
சீரகம் - 2 கரண்டி
தாளிக்க  -  தேங்காய் எண்ணை, கடுகு, கருவேப்பிலை
உப்பு - தேவைக்கு
தயிர்  -  1 பெரிய கப்
தயார் செய்யும் முறை: 
காய்கறிகளை நீளவாக்கில்  நறுக்கி, வேகவிடவும்.
நீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.
பின்னர்  துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து, தேங்காய் எண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, காய்கறிகளைக் கொட்டி, அரைத்த மசாலாவை சேர்த்து கிளறவும்.
தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
ஆறிய பின் பறிமாறும் போது தயிர் சேர்த்து கலந்து பறிமாறவும்.

No comments:

Post a Comment