Pages

Thursday, November 26, 2015

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத்

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத் அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்!!....

முஸ்லிம் சமூகத்தை சார்ந்த .இளம் விஞ்ஞானியான அஹ்மதை தீவிரவாதியா சித்தரித்த குற்றத்திற்காக
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாண நிர்வாகம் பத்து மில்லியன் டாலரும் சிறுவன் அஹ்மத் படித்த கல்வி நிலையம் ஐந்து மில்லியன் டாலரும் அபராதமாக தர வேண்டும் என்று சிறுவன் அஹ்மதின் வழக்கறிஞர் டெக்ஸாஸ் மாகண நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
சிறுவன் அஹ்மத் தயாரித்து கொண்டு வந்த கடிகாரத்தை வெடிகுண்டு என எண்ணி அவன் படித்த பள்ளி நிர்வாகம் அவனை காவல் துறையிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து சிறுவன் அஹ்மதின் கரங்களில் விலங்கிடபட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப் பட்டான்
பிறகு நடை பெற்ற விசாரணையின் போது அவன் கொண்டு வந்தது வெடி குண்டு அல்ல அவனது சிந்தனை ஆற்றலை பறை சாற்றும் கடிகாரம் என்பது தெரியவந்தது
இதனை தொடர்ந்து சிறுவன் அஹ்மத் படித்து வந்த பள்ளிகூடமும் அவனை கைது செய்து அழைத்து சென்ற டெக்ஸாஸ் மாகாண காவல் துறையும் வருத்தம் தெரிவித்தது
பிறகு சிறுவனையும் அவனது குடு்ம்பத்தையும் சமாதான படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா பேஸ்புக் நிறுவனர் மற்றும் கூகுலின் தலைமை நிர்வாகி ஆகியோர் சிறுவன் அஹ்மதை சந்தித்து மரியாதை செய்தனர்...

No comments:

Post a Comment