Pages

Tuesday, November 18, 2014

தேவையற்ற முடி வளராமல் தடுக்க...


ஆண்களைப் போல் பெண்களுக்கும் முகம், கை, கால்களில் முடி வளர்வது அதிகரித்திருக்கிறது. இதற்கென பியூட்டி பார்லர்களிலும் வேக்ஸிங், த்ரெட்டிங் செய்யப்படுகிறது. தொடர்ந்து பார்லர்களில் போய் த்ரெட்டிங், வேக்ஸிங் செய்து கொள்வதால், அந்த இடங்களில் முடி தடிமனாகவும், முன்பை விட அதிகமாகவும் வளர்கிறதே என்பது தான் பெரும்பாலான பெண்களின் கவலை....

த்ரெட்டிங், வாக்ஸிங் செய்து கொள்ளும்போது முடி அடர்த்தியாகவும், அதிகமாகவும் வளரத்தான் செய்யும். இவற்றை நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியை வலுவிழக்கவும், உதிரவும் செய்து மேலும், வளரவிடாமல் தடுக்கலாம். 
* சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை தூள், கோரைக்கிழங்கு தூள், கஸ்தூரி மஞ்சள் தூள் இந்த நான்கையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு கலந்து தினமும் பூசலாம். விரைவிலேயே, முடியின் நிறம் மாறி வலுவிழந்து, உதிரத் தொடங்கும்.
* மிருதுவான பியூமிக்ஸ்டோனை வாங்கி, இந்த நான்கு பொடியையும் கலந்து நீர் விட்டு குழைத்து, பியூமிக்ஸ்டோன் பயன்படுத்தி, முடி இருக்கும் பகுதியில் தேயுங்கள். தினமும் செய்து வர, முடி உதிரும். வளராது.

No comments:

Post a Comment