"உயிர்மூச்சு" பகுதியில் வெளியாகி இருந்த "வீடு தேடி வந்த
சிட்டுக்குருவிகள்" கட்டுரையைப் படித்துவிட்டு பாராட்டியிருந்த வாசகர்
வடிவேல்முருகன், நெரிசல் மிகுந்த சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் ஒரு
வீட்டைத் தேடி வந்து பச்சைக்கிளிகள் உணவருந்திச் செல்லும் அற்புதம் பற்றிய
பதிவை எதிர்பார்க்கிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார்.