Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 20, 2015

நீரை கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டுமா??


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 நீரிழிவு மாத்திரைகள் விஷத்தன்மை வாய்ந்தவை: அமெரிக்கா எச்சரிக்கை!


புதிதாக அறிமுகப்படுத் தப்பட்ட 3 நீரிழிவு மாத்திரைகள் விஷத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவர்களில் டைப்–2 நீரிழிவு நோயாளிகள் கனாக்ளிபுளோசின், டயாக்ளிபுளோசின் மற்றும் எம்யாக் புளோசின் ஆகிய 3 மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

Tuesday, May 19, 2015

30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி

நீங்கள் பெண்கள் சுயமுன்னேற்றத்தைப் பறை சாற்றும் ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படத்தை பார்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அதே புத்துணர்ச்சியுடன் ஜோதிமணியின் வெற்றியையும் கொண்டாடுங்கள்.
ஆணுக்குப் பெண் சரிசமமாக வேலை செய்தாலும் அவர்களுக்கு சவால்கள் நிறைய இருக்கின்றன. அதுவும் லாரி ஓட்டுநர் என்றால் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

Sunday, May 17, 2015

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா?

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா?

முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

Friday, May 15, 2015

ஆஸ்துமா அச்சம் வேண்டாம்! வந்தாச்சு புது சிகிச்சை


நீங்கள் மாசு நிறைந்த இடத்துக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. இளைப்பு ஏற்படுகிறது. மூச்சு விட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது போல் உணர்கிறீர்கள். இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம்.

Sunday, May 10, 2015

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

அலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடலாமா?

எமது 1500 வது பதிவு இது:


மனிதர்களுடைய நோயைத் தீர்க்கவே அனைத்து வகையான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைச் சாப்பிட்டால் குணம் கிடைக்கும், மற்றொரு மருத்துவ முறையில் தரப்படும் மருந்து வேண்டாம் என்ற மூடநம்பிக்கை தேவையில்லை. இது நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்வது போன்றது. அலோபதி, சித்தா மருந்துகளைச் சேர்த்து உட்கொள்ளலாம். அதனால் கெடுதல் இல்லை.

Thursday, May 7, 2015

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்... தெரிந்துகொள்வோம் !

வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல்கள்... தெரிந்துகொள்வோம் !!!
குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease) நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.

Wednesday, May 6, 2015

காசு..பணம்...துட்டு


ஒரு ரூபாய் காசு பார்த்திருப்பீர்கள். ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் 1994 நவம்பர் மாதத்தோடு, ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியிருந்தது.

Thursday, April 30, 2015

அல்குர்ஆனில் விஞ்ஞானம்


almighy-arrahim.blogspot.com
இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. 
அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.

“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45)

வெங்காய வத்தக் குழம்பு

என்னென்ன தேவை?
வெங்காயம்-2
எள் எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு1 தேக்கரண்டி
வெந்தயம்1 தேக்கரண்டி
கடலைபருப்பு அல்லது துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
சாம்பார் பொடி -3 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
புளி-3எலுமிச்சை அளவு
வெல்லம்1/2 தேக்கரண்டி(விரும்பினால்) அரிசி மாவு1 தேக்கரண்டி

Monday, April 27, 2015

நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் :-

பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

Sunday, April 26, 2015

இளம்விஞ்ஞானி மாஷாநஸீம்

 

இளம் விஞ்ஞானி மாஷா நஸீம் அமெரிக்காவிற்கு செல்ல இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் தமிழகத்தின் கன்னியாகுமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். ராஜீவ் பெல்லோஷிப் புரோகிராம் வழியாக தொழில்முனைவோர் பயிற்சி சுற்றுலாவிற்கு மூன்றுவார காலம் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடைபெறும் ஆக்கத்திறன் பயிற்சியில் கலந்து கொள்கிறார். கூகுள்,

சிக்கன் வடை

என்னென்ன தேவை?

சிக்கன்  - கால் கிலோ
முட்டை - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 6
இஞ்சி - சிறியதுண்டு
சிறிய வெங்காயம் - 10 பல்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

Wednesday, April 22, 2015

மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்


டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘மாரடைப்புச் சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்’ நூலில் இருந்து பயனுள்ள சில பகுதிகள்:
ஒருவருக்கு மாரடைப்பு வந்த பின்னர், முதல் 60 நிமிடங்கள் அவருக்குப் `பொன்னான நேரம்’. இந்த நேரத்துக்குள் நவீன சிகிச்சைகள் தரக்கூடிய, அதாவது, கேத்லேப் வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைச் செய்துகொண்டால், 100 சதவீதம் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி, இதயத் தசைகள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள் ! மின்சாரம்… பெட்ரோல்… கேஸ்… சூப்பர் 100 டிப்ஸ்!


மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை வீட்டுத் தேவைக்காக வாங்கிக் குவிக்கும்போது, அவற்றை இயக்கும் கரன்ட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பெரும்பாலானவர்கள் இங்கு யோசிப்பதில்லை. ஆனால், கரன்ட் ‘பில்’லை பார்த்த பின்புதான், ‘ஐயோ’ என அலறல் போடுவார்கள். இதே கதைதான்… டூ-வீலர், ஃபோர் வீலர், சமையல் கேஸ் என தினம் தினம் எரிபொருளுக்காக நாம் செலவழிக்கும் தொகையும். இதெல்லாம் மாதக் கடைசியில் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி பயமுறுத்தும்போது ‘பக் பக்’ என்றிருக்கும்!

Sunday, April 19, 2015

சூப்பரான சிக்கன் 65


தேவையான பொருட்கள்: 
இஞ்சி சிறு துண்டாக நறுக்கியது               5
உரித்த வெள்ளைப்பூண்டு பல்                    7
தனி மிளகாய்ப் பொடி                                  3 ஸ்பூன்
மஞ்சள் பொடி                                                1/2 ஸ்பூன் 
கேசரி பவுடர் (ஆரஞ்சு)                                1சிட்டிகை
கட்டித் தயிர்                                                   1/4 கப்
சுத்தம் செய்த கோழிக் கறி                          1/2 கிலோ
உப்பு தேவையான அளவு
பொறித்தெடுக்கத் தேவையான எண்ணெய்

முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்

தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்  மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த  பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும். இதனை உலகம் முழுவதும் பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில், வியட்னாம், இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரி பயிரிடப்படுகிறது.  முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது

Saturday, April 18, 2015

அவியல்


தேவையான பொருட்கள்: 
காய்கறிகள் - உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பூசனிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பட்டாணி, அவரைக்காய், கத்தரிக்காய் -  1/2 கிலோ அளவு  ( இனிப்பு, புளிப்பு, இலைக்காய்கறிகள் தவிர்க்கவும்)

Friday, April 17, 2015

இஞ்சிப் பால்..! நுரையீரல் சுத்தமாகும் !


இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

Tuesday, April 14, 2015

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் கறி


தேவையானபொருள்கள் :
தாளிக்க தேவையானவை :
எண்ணெய்                  -      ஒரு மேஜைக்கரண்டி
பட்டைஏலம்கிராம்பு       -      தலா இரண்டு
கொத்துமல்லித்தழை        -      கால் கட்டு
புதினா                     -      சிறிது

Friday, April 10, 2015

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்


உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

Thursday, April 9, 2015

எலும்பை இரும்பாக்கும் எனர்ஜி ஃபுட்ஸ்!

' 'ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்த என் பையன் தடுக்கி விழுந்திட்டான்... லேசான காயம்தான். காலை மடக்க முடியலைனு அழுதான். பதறிப்போய், அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். எலும்பு முறிவுனு சொல்லிட்டாங்க... சின்ன அடிதான்... ஃப்ராக்சர் ஆகுற அளவுக்கு ஏன் வந்ததுனு தெரியலை!'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி.  

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!


கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

Wednesday, April 8, 2015

வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!


ஜில்லுனு சில டிப்ஸ்
வ ந்தாச்சு கோடை! ‘மழையா பெய்தது!’ என்று வியக்கும் வண்ணம் எங்கும் தெப்பலாக நனைந்தபடி நடமாடுகிறார்கள் மக்கள். ‘வெயிலடிச்சா வேர்க்கத்தான் செய்யும்’ என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. உடலின் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக வெளியேறிவிட்டால், ‘சன் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து நேரலாம்.
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.