201502251501514666_NASA-rover-clicks-stunning-selfie-on-Mars_SECVPFசெவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது.