Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 31, 2014

இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுங்கள்!:


இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுங்கள்!: துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தை கள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் மற்றும் சந்திர பூஷன் ஆகியோர் தலைமையிலான குழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து...

தமிழகத்தை ஆளுமா உழவன் உணவகம்?


“ஹோட்டல்ல சாப்பிடாதீங்க உடம்பு கெட்டுடும்" நம் அன்புக்குரியவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அறிவுரை. மதுரையிலோ, மனைவி முதல் மருத்துவர் வரை “ஹோட்டல்ல சாப்பிடுங்க” என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் அந்த ஹோட்டல், உழவன் உணவகம்.

Sunday, December 21, 2014

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியங்கள்! illuminati and secret codes

இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

Friday, December 19, 2014

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. 

Thursday, December 18, 2014

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம்.

விலை உயர்ந்த குடியிருப்புகள் - சென்னை முதலிடம்!


இந்தியாவில் சில வருடங்களாகவே குடியிருப்பு வர்த்தகமானது மந்தமாக இருந்துவருகிறது. இருப்பினும் சில நகரங்களில் குடியிருப்புகளின் விலை அதிகரித்து வருவதாகவும், குடியிருப்புகளின் விலை அதிகரித்துள்ள 26 பெரிய நகரங்களின் வரிசையில் சென்னை முதல் இடத்தில் இருப்பதாகவும் நேஷனல் ஹவுஸிங் பேங்க் தெரிவித்துள்ளது.

உங்கள் நேரத்தை திருடுவது யார்!


 உங்கள் நேரத்தை திருடுவது யார்!
ஆனால். நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும் தான். ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம்.
நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கையில் இருக்கிறது. இதில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு மீதமிருக்கும் நேரம் என்ன? தேவையில்லாமல் நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? அதனை எப்படி சரியாக செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ...

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

மும்பை துறைமுகத்தில் அமெரிக்க கறிக்கோழி 'லெக்பீஸ்':

மலிவு விலையில் இறக்குமதியா என உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கறிக்கோழி இறக்குமதிக்கான தடையை, உலக வர்த்தக அமைப்பு ரத்து செய்ததை அடுத்து, மும்பை துறைமுகத்துக்கு, அமெரிக்க கறிக்கோழி, 'லெக்பீஸ்' கன்டெய்னரில் வந்து உள்ளது.

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் !

ஏற்றுமதி தொழில் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே தமிழர்கள் கிரேக்கத்துக்கு சென்று வணிகம் செய்ததையும், வேறு பல நாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றதையும் வைத்துப் பார்க்கும்போது, நமது ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டாயிரம் வயதுக்கு மேல் என்று சொல்லலாம்.

அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!


 அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!
                   
கடந்த ஆறு மாதங்களாக மின் வணிக நிறுவனங்கள் (ஆன்லைன் / இ-காமார்ஸ்) தேசிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம்.

Wednesday, December 17, 2014

லட்சங்களில் சம்பளம் தரும் ஹோட்டல் துறை படிப்புகள்!

வேலை என்பது மனநிறைவுடனும், ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம், கைநிறைய சம்பளமும் கிடைக்க வேண்டும். இதற்கு எந்தப் படிப்பு படிக்கலாம் என்று கேட்கிறவர்கள் ஹோட்டல் துறை படிப்பை கட்டாயம் ஆராயலாம்.

Tuesday, December 16, 2014

ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவை விட அதிக தங்கம் வைத்திருக்கும் 3 கேரள நிறுவனங்கள்...

கொச்சி: சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரலேயாவை விட கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் அதிக தங்கம் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியர்களில் பலர் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். அதிலும் கேரளாவில் 2 லட்சம் பேர் தங்கம் தொடர்பான துறையில் தான் வேலை செய்கிறார்கள். கேரளாவில் நடக்கும் திருமணங்களில் பெண்கள் கழுத்தில் இருந்து வயிறு வரை தங்க நகை அணிவதை பார்க்கலாம். இந்நிலையில் தான் கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் அளிக்கும் நிறுவனங்களிடம் உள்ள தங்கம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

Monday, December 15, 2014

10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை. 

Thursday, December 11, 2014

‘அட்டாக்!’ - ஜெயலலிதாவின் அஜெண்டா


'அம்மா’வின் நிரந்தர விடுதலைக்காக 'அம்மன்’ கோயில்களில் அ.தி.மு.க-வினர் தவம்கிடப்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபவானி பெரிய பாளையத்தம்மன் கோயிலில் 108 பால்குடங்கள் எடுத்து பாலாபிஷேகம் நடக்கிறது. மயிலாப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. பர்கூர் ஒன்றியம் சார்பில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வழிபாடு தொடர்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1,008 தேங்காய் உடைத்து அபிஷேகம். போளூர்குப்பம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் 108 மூலிகைப் பொருட்களை வைத்து, யாகசாலை அமைத்து, மகாசண்டி ஹோமம் நடத்துகின்றனர். ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோயில், புதுக்கோட்டை அருள்மிகு பிரதாம்பாள் கோயில்... என எங்கு திரும்பினாலும் ஜெயலலிதாவின் விடுதலைக்காகவும், அவர் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதற்காகவும் வேண்டுதல்கள்... பால்குடங்கள்... பன்னீர்க் காவடிகள்!

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - அ

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

Wednesday, December 10, 2014

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்
ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்
ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

Monday, December 8, 2014

மாசு கணக்கீடு கருவியை கண்டுபிடித்து ராஜபாளையம் மாணவி சாதனை!

விருதுநகர்: தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை கணக்கிடும் கருவியை ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ரஜித்ரா கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு

Sunday, December 7, 2014

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கானஉணவுகள்:

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவானஉணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டியஉணவுகள் :

இளநீர்
இதில் பொட்டாசியம்மெக்னீஷியமும் அதிகம்உள்ளனஇவை சிறுசீரகக் கற்களின்முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படியவிடாமல் தடுக்க வல்லவை.

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்குசமம்:

கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில்அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான்பழங்கள், காய்கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாகசத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப்கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.

Thursday, December 4, 2014

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி!

10704024_342127972639877_7307573723186918378_nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இரவு சாப்பிட்ட பின் இதெல்லாம் செய்யாதீங்க!

நம் உடலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை.
வாக்கிங் செல்வதுafter_dinner_007

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
10 tips to protect your Android device
ஸ்கிரீன் லாக்!

Wednesday, December 3, 2014

மர ‘நிறைவு‘டன் ஒரு வாழ்க்கை!

மரங்கள் நகர்வதில்லை;

மரங்கள் பேசுவதில்லை;

மரங்கள் சிரிப்பதும் இல்லை,
அழுவதும் இல்லை- ஆனாலும்
மற்றவர்களுக்காக வாழும் குறிக்கோள்
மரங்களுக்கு உண்டு!
நமக்கு?

Tuesday, December 2, 2014

நீர் இறைவனின் முதல் கொடை


'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து.

உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 

Sunday, November 30, 2014

தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்


தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம்.

தொலைபேசி மின்சாரம் இன்சூரன்ஸ் உட்பட அனைத்துக்கும் ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தும் வசதி


ncluding phone Electric Insurance Payment facility to all in one place
மும்பை: மின்சாரம், தொலைபேசி, குடிநீர் கட்டணம், இன்சூரன்ஸ் உட்பட அனைத்து கட்டணத்தையும் ஒரே இடத்தில்  செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. இன்டர்நெட் பேங்கிங் போன்றவை மூலம் சாத்தியமாக்கும் இந்த வசதியை  அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இது இருக்கும்.  இருக்கும் இடத்தில் இருந்தே தொலைபேசி, மின் கட்டணம்  உள்ளிட்டவற்றை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால் இந்த வசதி இன்டர்நெட் பேங்கிங், டெபிட்கார்டு  போன்றவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. மற்றவர்கள் ஒவ்வொரு கட்டணம் செலுத்துவதற்கும் ஒரு  இடத்துக்கு ஓடவேண்டியுள்ளது. இதை தவிர்க்க நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தொலைபேசி, மின்சாரம், குடிநீர்  கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரிமீயம் ஆகியவை ஒரே இடத்தில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.  தற்போது சில  இடங்களில் இத்தகைய வசதிகள் இருந்தாலும், அவை வாடிக்கையாளரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய  போதுமானதாக இல்லை. எனவே, ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் மையம் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்  குறித்து ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் ஜி.பத்மநாபன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது, நாட்டில் உள்ள  முக்கியமான 20 நகரங்களில் 3,080 கோடி பில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ 6 லட்சத்து 22 ஆயிரத்து 300 கோடி  செலுத்தப்படுவது கண்டறியப்பட்டது. 

Saturday, November 29, 2014

கொங்கு நாட்டு கோழி சாறு


நாட்டு கோழி - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 
சீரகம் - 2 ஸ்பூன் 
மல்லி - 4 ஸ்பூன் 
சோம்பு - கால் ஸ்பூன் 
வர மிளகாய் - 4 
பூண்டு - 2 பல்லு 
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன் 
எண்ணெய் - 2 ஸ்பூன் 
கருவேப்பிலை - 2 இனுக்கு 
குருமிளகு - 4
மஞ்சள் - 1/4 ஸ்பூன் 
கடுகு - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி 

Friday, November 28, 2014

மாற்றுத் திறனாளிக்கும் வசப்படுமா ஐ.ஏ.எஸ்?



  
மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவரிடம் உரையாடுகிறார் அந்த ஆட்சியர். “உங்களைப் போன்று கலெக்டராவதுதான் என் லட்சியம். ஆனால், அதற்கு வசதிதான் இல்லை” என்று வேதனையைச் சிரிப்பாக வெளிப்படுத்துகிறான் அந்த இளைஞன். அந்தச் சிரிப்பு ஏற்படுத்திய பாதிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கவைத்தது.

சிக்கன் கருவேப்பிலை ப்ரை


Ingredients

Wednesday, November 26, 2014

பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்….


111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. 
#A
Ambarella —— அம்பிரலங்காய்
Apple —— அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot —— சருக்கரை பாதாமி

Monday, November 24, 2014

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது ஒரு சுவாரசிய வரலாறு

மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர்.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம் பாகம் 4

ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார்.
நீதிபதி குன்ஹா கடந்த 27ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் உள்ள முக்கியமான கருத்துகளைத் தொகுத்து கடந்த மூன்று தொடர் கடிதங்களில் நான் தெரிவித்திருப்பதை நீ படித்திருப்பாய். 
தொடர்ந்து நீதிபதி குன்ஹா அவர்கள் மேலும் தனது  தீர்ப்பில், 

25 சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள்: மத்திய அரசு திட்டம்

மத்திய மரபு சாரா புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் நாட்டில் 25 சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இதுவரை 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணைச் செயலர் தருண் கபூர் தெரிவித்தார்.

Sunday, November 23, 2014

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-பாகம்-3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தனி நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டு வதாக நேற்றைய கடிதத்தின் இறுதியில் தெரிவித் திருந்தேன். நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில்,
"பொது ஊழியர் (அதாவது முதலமைச்சராக) ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ. - சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங் களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது.

களறி கறி


காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.

எலே! எங்க திருநெல்வேலி சீமைலே


திருநெல்வேலி.....

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே,

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே,

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,

Saturday, November 22, 2014

ராம்பால் ஆசிரமத்தில் ஆயுதக்குவியல்!


சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் இருந்து அதிரவைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசார் கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் ராம்பாலின் ஆதரவாளர்கள் 'போர்' தொடுத்தனர். இதனால் ராம்பால் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

பன்னிரண்டாவது மாடியிலும்...பலே விவசாயம்!


இயற்கை மீதும்... விவசாயத்தின் மீதும் நமக்கு காதல் இருந்தால்... எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், சென்னை மாநகரத்தில் வசிக்கும் நிர்மல் கிஸான். 'எக்ஸ்னோரா' எனும் அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் இவர், கோயம்போடு மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் வானுயுர நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 12-ம் தளத்தில் உள்ள தன்னுடைய வீட்டில், விவசாயம் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்-முழுக்க முழுக்க இயற்கை முறையில்!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


தூக்கமின்மை நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிடணும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறியலாம்.

செர்ரி பழம்


கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். 

பறக்கும் மீன்கள்



   பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-2


"பொது ஊழியர் (அதாவது முதலமைச்சராக) ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ. - சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங் களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது. 
ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. 

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி


மும்பை: இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அதனை உடைக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியது.

Friday, November 21, 2014

வீட்டுக்கொரு வைத்தியர்...நொச்சி

 பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1


ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!!! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" ‪
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட் டுள்ளது என்பதை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம்!

"ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்" - இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் என்ன சொல்ல வந்தேன் என்பது உனக்குப் புரியும்.

இலந்தைப் பழம்


சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்

உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்; 13-வது இடத்தில் மும்பை

துபாய்: உலகின் டாப் 15 நகரங்களில் துபாய் முதலிடத்திலும், 13வது இடத்தில் மும்பையும் இடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் நகரங்களில் நிலவும் சுறுசுறுப்பான பொருளாதாரம், தனி நபர் வாழ்க்கைதரம், அன்றாட செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் முன்னாள் மாணவர் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் டாப் 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.