பயணங்களின்போது ரயிலிலோ பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கை
கிடைத்தால் ஜாக்பாட் அடித்ததுபோல் மனம் குதூகலிப்பது வழக்கம். இந்த
குதூகலத்திற்கு முக்கிய காரணம் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக்
குளிர்ச்சியாக இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே செல்வதுதான்.
கிராம வாழ்க்கையை நினைத்து நம் அடிமனம் ஏங்குவது இந்த நேரங்களில்தான்.