Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 7, 2014

ரோட்டுக்கடை சாப்பாட்டுப் பிரியரா?

சமீபத்தில் ஒரு சிறுவனை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வருவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்தபோது, எல்லாமும் நன்றாக இருந்ததால், என்ன பிரச்னை என்றே கண்டறிய முடியாமல் திணறினர் மருத்துவர்கள். அவனுடைய உணவுப் பழக்க வழக்கத்தை விசாரித்தபோதுதான் காரணம் தெரிந்தது. அந்தச் சிறுவன் சாலையோரக் கடையில் இனிப்பு வகைகளைச் சாப்பிட்டிருக்கிறான். அதில் சேர்க்கப்பட்ட அதிகப்படியான செயற்கை நிறங்கள்தான் அவனுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் வரக் காரணமாக இருந்திருக்கிறது. 

Thursday, November 6, 2014

கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு, சவூதி ஆசிரியை சாதனை..!













நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துாதர்என்பது மீண்டும் நிருபணம்!!



அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டு பிடிப்பு…
  1. அல்லாஹு அக்பர்!
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும்
விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்கமுடியும் இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசிரியை.

ரசகுல்லா/ ரசமலாய்


தேவையான பொருள்கள்:
ரசகுல்லா:பால் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை – 400 கிராம்
மைதா – 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
தண்ணீர் – 2 லிட்டர்

Wednesday, November 5, 2014

'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பும் ஃபேஸ்புக்!


கிரானைட் கனிம வளக் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ஒரு மாவட்ட ஆட்சியரின் பொறுப்பை மாநிலத்திற்கும் இந்த நாட்டிற்கும் உணர்த்தியவர்  ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். 
அரசியல் கட்சிகளின் `பவர்`, கனிமக்  கொள்ளை தாதாக்களின் மிரட்டல் என எதற்கும் அஞ்சாமல் கனிம வளக் கொள்ளை சாம்ராஜ்ஜியத்தை  மக்களின் முன் நிறுத்தியதால், அவரை கொண்டாடும் ஒரு கூட்டம் தானாகவே  பெருகி வருகிறது. 

Tuesday, November 4, 2014

தகதகக்கும் இயற்கைத் தக்காளி...


நேரடி விற்பனையில், ரூ.1 லட்சம் கூடுதல் லாபம்!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்
கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்... அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில், என்ன விலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்... சில விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, தரகு இல்லாமல் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள நிழலிக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரமும் ஒருவர்.
விளையும் தக்காளியை வியாபாரிகளுக்குக் கொடுக்காமல்... தன் மனைவி சுகந்தியுடன் சேர்ந்து, நடுத்தர ஊர்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் கொண்டு போய் சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகிறார், சோமசுந்தரம். கொஞ்சம் மாற்றி யோசித்து, இவர்கள் நல்ல லாபம் ஈட்டி வரும் வித்தையை, நாமும் தெரிந்து கொள்வோமா!

க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!


ன்றைய இளைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை நரை. காரணம் கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.
‘இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. நரைக்கும் கூட விடை இருக்கு’ என்கிற ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம், இயற்கையான பொருட்களை வைத்து நரைமுடிக்கு திரை போடும் வழிகளைச் சொல்கிறார்.

Monday, November 3, 2014

அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்

விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள்...

ஆர்வமும் சிறிதளவு ஆதரவும் இருந்தால், அனுதினமும் நம் வாழ்க்கையில் ஆச்சர்யங்கள் அலங்கரிக்கும். பிடித்த துறையில், விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் உழைத்தால், அதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும் என்கிறார்கள் தாரணியும், யாழினியும். இவர்கள் இருவரையும் விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள் என்றே சொல்லலாம். காரணம், ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப் படும் அப்ளிகேஷன்களை இவர்களே உருவாக்கி, மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பாதிக் கிறார்கள்.

Sunday, November 2, 2014

தானத்தையும் விட உயர்ந்தது தாய் பால்

தாய்ப்பால் என்பது அரிய உணவு. அதிசய உணவு. தாய்ப்பாலை போதுமான அளவுக்கு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாற்றலிலும் உச்சத்தை தொடுவார்கள். எனவே தான் தாய்ப்பாலை தானத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.