டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக
இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது டெல்லி தேர்தலில்
‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே இருக்கும்.