‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.