Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

குலசை

அன்பு குலசை வாழ் நண்பர்களே!
குலசை சுல்தானின்(Engr.Sulthan) சிறிய அறிமுக மடல்!
உங்களில் பலருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். குலசையை பிறப்பிடமாக கொண்டு, தற்போது சென்னை(புதுப்பேட்டை) வாசம்.
ஓய்வு பெற்ற மின்னியல் பொறியாளர். தற்போது முழு நேர பொதுச் சேவைகள், தாவாப் பணி இணைய தளம் மூலமாக.செய்து வருகிறேன்.
இதற்கிடையே நம் ஊரின் வரலாற்றை தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்ற நம் ஊர் நண்பர்கள் சிலரின் அன்பு வேண்டுகோளை ஏற்று அந்தப் பணியினை கடந்த வருடம் துவக்கினேன். இடையினில் இணைய தள வேலைப் பளு காரணமாக கொஞ்சம் நிறுத்தி வைத்துள்ளேன். தினமும் 80,000 to ஒருஇலட்சம் பேர்களுக்கு குறைந்தது 2 மெயில்களாவது அனுப்பும் பணி.அதற்காக பதிவுகள் தயார் செய்ய வேண்டும். இதற்கே முழு நேரமும் போத வில்லை. இருப்பினும் ஊர்ப் பணி முக்கியம் என்ற காரணத்தால் திரும்பவும் நூல் எழுதும் வேலையை துவக்கி விட்டேன். இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என நம்புகிறேன்.
இது ஒரு முழுமையான வரலாற்று நூலாகவும் இல்லாமல் ஒரு பயண நூல் வடிவில் எழுதுகிறேன். நான் தினமும் பார்த்துப் பழகிய இடங்கள், அந்த இடங்களின் வரலாற்றுப் பிண்ணனி, நம்மூர் மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறைகள்,தொண்டு தொட்டு வரும் பழக்க வழக்,கங்கள், ஊருக்குப் பெருமை சேர்த்தவர்கள், கல்வியாளர்கள்,போன்றவற்றைப் பற்றி எழுதுகிறேன். ஊரின் அன்றைய,இன்றைய நிலை,பற்றியும் விரிவாக சொல்கிறேன்.
எந்தவிதமான நெருக்கடிகளுக்கும் இடங்கொடாமல் முழுக்க முழுக்க எனது கண்ணோட்டத்தில் சுதந்திரமாக எழுத முடிவெடுத்துள்ளேன்.மதங்கள் எனும் வரப்பினை தாண்டி நின்று இதை எழுதுகிறேன்.இந்நூலில் குலசையின் அனைத்து மக்களின் நல் இதயங்களை வெளிப்படுத்தி காட்ட இருக்கிறேன்.
இவ்விசயத்தில் எனது நெருங்கிய நண்பர் திரு.பழநீஸ்வரன்(ஒய்வு பெற்ற தலமை ஆசிரியர், தம்பி மகரூஃப் போன்றவர்களும் உதவியாக இருக்கிறார்கள். நூல் முடிவடையும் வேளை தெரியபடுத்துகிறேன்.,
சிறு நினைவூட்டல்:
உடன்குடி அனல் மின் நிலையம் குலசையைச் சார்ந்தது ,குலசையில் தான் அமையப் படவுள்ளது என்பதை விக்கீப்பீடியா எனும் இணைய தளத்தில் Official ஆக பதிந்துள்ளேன். இத் தளம் உலக பிரசித்துப் பெற்ற உலக மக்கள் பெரும்பாலோர் Refer செய்யும் தளமாகும்.
உங்களுக்கு தெரிந்த நம்மூர் நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்த வேண்டுகிறேன்.
அன்பு,
குலசை சுல்தான்(எ)
Engr.Sulthan
pudupet,chennai-2
தொடர்புக்கு:9962060353

நூலின் முகப்பு பக்கமும், பின் அட்டையும் இந்த வடிவில் இருக்கலாம்.




Engr.Sulthan

இன்று உலக பல் மருத்துவர் தினம்..(06/03/2012)


உலக பல் மருத்துவர் தினமான இன்று நற்சேவை செய்து வரும் ஒரு பல் மருத்துவரைப் பற்றி இங்கு நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சிறு வயதிலிருந்தே பல் டாக்டருக்கும் நமக்கும் காத தூரம் தான். எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே பல் கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ட்ராங். என் அம்மாவுக்கு அவரது இறுதிக் காலம் வரை(72 வயதில்), ஒரு பல் கூட விழவில்லை என்பதும், வெற்றிலை போடும் பழக்கமுள்ள அவர் கொட்டைப் பாக்கை ஈஸியாக கடை வாய் பற்களால் உடைத்து கடித்து சாப்பிடுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். காலத்தின் கோலம், உணவு பழக்க வழக்கங்கள் இவைகளினால் நானும் பல் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னையில் சில மருத்துவர்களை அணுகி விசாரித்ததில் அவர்கள் சொன்ன கட்டணத்தைக் கேட்டதும் பேசாமல் திரும்பி விட்டேன்.அவ்வளவுக்கு மிக அதிகமாக இருந்தது.
நான் அடிக்கடி எனது சொந்த ஊருக்கு போய் நண்பர்களை சந்தித்து வருவது வழக்கம். அப்படி ஒரு முறை ஊருக்கு(குலசை) போய் என் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது மகனும் பல் மருத்துவர் தான். (எனது நான்கு நெருங்கிய நண்பர்களின் மகன்களும் பல் மருத்துவர்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்) அப்போது நான் பல் சிகிட்சை பற்றி Dental care” எனும் தலைப்பில் ஒரு power point show வில்Medical book ஆக வெளியிட்டிருந்தேன். அதைப் பற்றி பேசும் போது .பல் மருத்துவரான நண்பரின் மகன், “அங்கிள் நீங்கள் ஏன் உங்கள் பல்லுக்கு சிகிட்சை பெறாமல் இருக்கிறீர்கள், உடனடியாக சிகிட்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதன் பேரில் அவரிடம் சிகிட்சை பெற ஒத்துக் கொண்டு சென்றேன்.
தூத்துக் குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் என்ற ஊரில், அவ்வூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில், “சுபா பல் மருத்துவ மனை” எனும் பெயரில் அவரும் அவரது மனைவியும்(அவரும் பல் மருத்துவர்) இணைந்து கடந்த 6,7 வருடங்களாக சிறப்புடன் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவருடன் எனது சிகிட்சை(4,5 நாட்கள்) முடிந்ததும் கட்டணம் எவ்வளவு என கேட்டதும், அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் அதிர்ந்து போனேன். காரணம் சென்னையில் இதே சிகிட்சைக்கு கேட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இருந்தது தான். ஒரு வேளை தெரிந்தவன் என்பதால் குறைவாகச் சொல்கிறாரோ என நினைத்து கேட்டபோது, இங்கு சிகிட்சைக்கு வரும் அனைவருக்குமே ஒரே கட்டணந்தான் என்றார் Dr..கமலசங்கர்.
சென்னையில் உள்ள கட்டணத்தை கேட்டதும் மயக்கம் வந்தது.இவர் கூறிய மிக,மிக குறைவான சார்ஜை கேட்டதும் மகிழ்ச்சியில் மயங்கி போனேன். இப்படி வாங்கினால் கட்டுப் படியாகுமா என யதார்த்தமாக கேட்டதற்கு, இங்குள்ள நடுத்தர, ஏழை மக்களிடம் இதைவிட அதிகமாக வாங்க மனசில்லை. நியாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் கமலசங்கர் அவர்கள்..
மிகக் குறைந்த கட்டணம். மனதுக்கு நிறைவளிக்கும் உயரிய சேவை. மக்களின் கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும். இவரின் மருத்துவ மனை எப்போதும் மக்களால் நிரம்பி வழிகிறது. இது என் கண்களால் கண்ட நிஜம். ஓய்வு, சலிப்பின்றி தம்பதிகள் இருவரும் நேரம், காலம் பாராமல் உழைக்கிறார்கள். இன்று கிராம மக்களிடமும், சுற்றுப்புற கிராம மக்களிடமும் இவர்களுக்கு நல்ல பெயர். முன்பு பல மருத்துவர்கள் பல் வலி என வருவோர்க்கெல்லாம் பல்லை பிடுங்கி காசு பார்த்த காலம் போய், இப்போது பற்களை பிடுங்காமலேயே வேர் சிகிட்சை(ROOT CANAL TREATMENT)மூலம் வலியுள்ள பல்லைக் காப்பாற்றி பல்லுக்கு மறு வாழ்வு அளித்து வருவதோடு கிராம மக்களிடம் வேர் சிகிட்சை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் இவர். இன்று வேர் சிகிட்சை முறை பிரபலமாக இருந்தாலும், முதன்முதலில் இப் பகுதியில் இதை அறிமுகப்படுத்தியதே இவர் தான். மிக குறைந்த கட்டணத்தில் பல் வேர் சிகிட்சை. உதாரணமாக சென்னை, மற்றும் பிற நகரங்களில் இச்சிகிட்சைக்கு ரூ.3000முதல் வாங்கும் போது இவர் வசூலிக்கும் தொகையோ ரூ.1000 மட்டுமே. சென்னையில் பல் பிடுங்கரூ500-700 என்றால் இவர் வாங்குவதோ வெறும் ரூ.80 மட்டுமே. நம்ப முடியவில்லை அல்லவா.நிஜந்தான்.
உண்மையில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பெரிய மனசு இவருக்கு. அது தான் இவரது புகழ் இங்கு கொடி கட்டிப் பறக்கிறது.
கொடி கட்டி பறக்கிறது என்றதும் இப் பழமொழியைப் பற்றிய வரலாற்றை இங்கு ஒரு கூடுதல் செய்தியாகத் தருகிறேன். எங்கள் ஊரில்(குலசை) வெள்ளையர் ஆட்சி காலத்தில் கவுஸ் முகம்மது என்னும் பெரும் செல்வந்தர் மாட மாளிகை கட்டி ஓஹோவென வாழ்ந்து வந்தார். அப்போதைய ஆட்சி காலத்தில் அரசுக்கு தவறாமல் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வரி போன்றவற்றை செலுத்தி வருபவர்களுக்கு வெள்ளையர் சார்பில் ஒரு கொடி ஒன்று அவர்களது வீடுகளில் ஏற்றப்படும். அப்படி கொடி பறக்கும் வீடுகளுக்கும், அங்கு வசிக்கும் நபர்களுக்கும் அரசிலும், மக்கள் மத்தியிலும் தனிப்பட்ட செல்வாக்கும் கவுரவமும் இருந்தது. அவரின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடிக் கொண்டிருப்பதும், அவரது பேரன்களில் ஒருவர், என்னுடன் ஆரம்ப பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் இன்று ஒரு டீக் கடையில் வேலை செய்து வருவதும் வருந்த தக்க செய்தி. இன்று அந்த பெரிய மாளிகை வீடு கூட இல்லை. அதனால் தான் இன்று நாம் ஒருவரது புகழ், செல்வாக்கைப் பற்றி குறிப்பிடும்போது கொடி கட்டிப் பறக்கிறார் அவர் என்கிறோம்.
Dr. கமல சங்கர் வாரந்தோரும் அருகில் உள்ள Indian Naval Campக்கும் சென்று சிகிட்சை அளித்து வருவதோடு சிறப்பு அழைப்பின் பேரில் பெங்களூரு, ஹைதராபாத் என பறந்து சிகிட்சை அளித்துக் கொண்டிருக்கிறார். நம் அனைவரின் பாராட்டுகளுக்கும் உரிய முழுத் தகுதி,திறமை இவரிடம் இருக்கிறது. நண்பரின் மகன் என்பதற்கோ, விளம்பரத்திற்காகவோ இதை எழுதவில்லை. திறமையும் நேரிய சேவையும் எவரிடம் இருந்தாலும் தேடிச் சென்று பாராட்டுவோம். தற்போது சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகிலேயே சொந்தமாக புதிய மருத்துவ மனை ஒன்றை கட்டி வருகிறார். இவரது புகழ், சேவை மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். இவரது போன் நம்பர்:9443750377
எனது சிகிட்சையின் இடைவேளையின் போது இவரைப் பற்றி நான் கிறுக்கிய சிறு கவிதை ஒன்று இதோ:
பெறுபவர்: Dr.P.கமலசங்கர்,B.D.S
புன்னகையை தொலைத்த எனக்கு
புதிய முகம் தந்ததினால்-
அன்னையானாய் நீ எனக்கு!
பல் போனால் சொல் போகும்!
என் தமிழ் சொல் காத்த
பழநீ(யின்) குமரா!
விதியென்று வரவில்லை
வேறு வழியின்றி வரவில்லை
நீண்ட வழி கடந்து
அறிந்தே வந்தேன்!- உன்
ம(ரு)கத்துவம் தெரிந்தே வந்தேன்!
என் சாண் உடம்பின்
அழகு முத்துப் பந்தல்
தோரண வாயில்-சீர் படுத்தி
எனை சிரிக்க வைத்த கலைஞனே!
நற் பிறப்பின் நாயகனே!- எங்கள்
பற்களின் காவலனே! நீ வாழி!
ஊருக்கு உழைப்பதில் துணை நிற்கும்
உன் துணைவி! எழில் மகள்! தமிழ்
குல மகள் வாழியவே!
என்ன தவம் செய்தார் இவன் தந்தையென
நாடு போற்ற நீடு வாழ வாழ்த்துகிறேன்!
எங்கள் பல்லாண்டு (பல்+ஆண்டு ) -நீ
பல்லாண்டு வா!ழ்க! வளமுடன்!
என்றும் எந்தன் சிரிப்பினில்
தெரிவதெல்லாம் உன் முகமே!
குலசை சுல்தான்




ன்று பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி...

என பழமொழிக்கு சொல்லுவார்கள்.

நம்மில் பலபேருக்கு பல்தான் தகராறு.

அந்த காலத்து மனிதர்களை பாருங்கள்

என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்

உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள

32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது

போகட்டும். இருப்பதையாவது எப்படி

பாதுகாப்பது என பார்ப்போம்.

முதலில் பற்களின் பயன்பாடுகளை

பார்ப்போம்.

1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.

2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.

3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.

4. உண்ணும் உணவை நன்றாக மென்று

உண்பதற்கு பயன்படுகிறது.


பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்.





பற்களின் அமைப்பு


1,2 வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்கள்

4- முதல் கடைவாய்ப்பல்

5- இரண்டாம் கடைவாய்ப்பல்.

20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து

அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.

நிலையான பற்கள்.


1,2 - வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்

4- முதல் முன்கடைவாய்ப்பல்

5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.

6- முதல் கடைவாய் பல்.

7- இரண்டாம் கடைவாய் பல்.

8-மூன்றாம் கடைவாய் பல்.


பற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது

பற்றி அறிந்துகொள்வோம்.

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை

பல்துலக்குதல் வேண்டும்.

2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை

கொப்பளித்தல் வேண்டும்.
4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும்

நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்

வேண்டும்.
5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும்

உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல்

வேண்டும்.




6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை

பயன்படுத்துதல் வேண்டும்.

7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை

அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.



பாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய

வாய் மற்றும் பற்கள்.



நன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய்

மற்றும் பற்கள்.


பற்களில் வரும் பொதுவான நோய்கள்.






பற்களில் நோய் வரக்காரணங்கள்

1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக

வைக்காமல் இருப்பது.

2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்.

அதிகமான இனிப்பு உண்பது.

சுத்தமில்லாத உணவு வகைகள்.

3. தவறான வேலைகளுக்கு பற்களை

பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட)

4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.

5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும்

நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.

(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு

வரும் பல் பிரச்சனைகள்).

பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை.

பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.


1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை

சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.

(Pit and fissure sealant)


2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை







பற்களின் மேல் செலுத்துதல்.
3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம்

செய்து அடைத்தல்.(filling)
4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம்

செய்தல்(Scaling)

கரைகளை சுத்தம் செய்தல். (Scaling)

நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய

சிகிச்சைகள்.

1. பல்லை எடுத்தல்.

2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.

3. வேர் சிகிச்சை.

4. வேர் அறுவை சிகிச்சை.

5. ஈறு அறுவை சிகிச்சை.


புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை

பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்"

ஏற்படலாம்.


புகையிலையினால் வாயில் ஏற்படும்

ஆரம்பநிலை மாற்றங்கள்.

1. வாயில் எரிச்சல்.

2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.

3. வலி இல்லாத வெண்படலம்.

4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)


பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.

2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.

3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்

போது கூச்சம் மற்றும் வலி.

4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.

5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும்

வீக்கம் இருத்தல்.




குழந்தைகளின் பல் பராமரிப்பு.
1. பால் பற்களை அவை விழும் வரை

பாதுகாப்பது முக்கியம்.

2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால்

நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது

தடைபடலாம்.

3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை

குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம்

செய்ய வேண்டும்.

5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின்

பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை

உட்கொள்ள வேண்டும்.

7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால்


(சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி


கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில்


சிதையும் வாய்ப்பு உள்ளது.

8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை

துலக்கிவிட வேண்டும்.

9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை

பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை

செய்து கொள்ளவேண்டும்.

சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?


வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன்

காப்பது சால சிறந்தது. இந்த கட்டுரையை படித்தபின்

நீங்கள் மீண்டும் பல் துலக்குகையில் இந்த கட்டுரை

உங்கள் நினைவுக்கு வந்தால் அது இந்த கட்டுரைக்கு

கிடைத்த வெற்றியே.
நன்றி: www.linoj.do.am

பற்களை பாதுகாக்க உதவும் பல் மருத்துவம்-


பல் மருத்துவம் என்பது, ஸ்டோமடாலஜி' (stomatology) என்ற வாய் நோய்கள் பற்றிய படிப்பின் ஒரு பகுதி. மருத்துவ முறைகள் பி.டி.எஸ்., (பேச்சிலர் ஆப் டென்டல் சர்ஜரி) படிப்பு ஓராண்டு செய்முறை பயிற்சியை உள்ளடக்கியது. பல் மருத்துவ மாணவர்களுக்கு, அடிப்படை மருத்துவமும் கற்றுத்தரப்படுகிறது. முற்றிய நிலையிலுள்ள பல் சார்ந்த பிரச்னைகள் அறுவை சிகிச்சை முறையில் தான் சரி செய்யப்படுகின்றன.
பற்கள் சிதைவடைந்தாலோ, சொத்தைப் பல் ஏற்பட்டாலோ பாதரசம் போன்ற உலோகப் பொருட்கள் கலந்த கலவையாலோ, பீங்கானால் தயாரிக்கப்பட்ட கலவையாலோ சரி செய்யப்படுகின்றன. உடலின் மற்ற பாகங்களில் கோளாறு ஏற்பட்டாலும் பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதையும் பல் மருத்துவத்தில் பயிலலாம்.
துறைகள்இத்துறை பல்வேறு பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. பற்கள் சார்ந்த பிரிவுகள் மட்டுமல்லாமல் உயிரியல் தொடர்பான பல பிரிவுகள் இப்படிப்பை சார்ந்ததாகும். பயோகெமிஸ்ட்ரி, கிளினிக்கல் பிசியாலஜி, அனாடமி, டென்டல் மெட்டீரியல்ஸ், பத்தாலஜி, மைக்ரோபயாலஜி, பார்மகாலஜி, டென்டல் ஹிஸ்டாலஜி, எம்ப்ரியாலஜி ஆகிய பாடத்திட்டங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
* டென்டல் பப்ளிக் ஹெல்த்:இப்பிரிவில் பற்கள் சார்ந்த தொற்றுநோய் பற்றியும், சமூகத்தில் உடல்நலம் பற்றிய கொள்கைகளையும் விளக்குகிறது.
* என்டோடான்டிக்ஸ்:பற்குழி தொடர்பான நோய்களை பற்றிய பிரிவாகும்.
* ஓரல் மெடிசின் மற்றும் ரேடியாலஜி: கதிர் வீச்சுகள் மூலம் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறை.
* ஓரல் மற்றும் மேக்சில்லோபேஷியல் சர்ஜரி:பற்கள், தாடைகளில் உள்ள நோய்கள், புண்கள், கட்டிகள் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
* ஆர்த்தோடான்டிக்ஸ் மற்றும் டென்டோபேசியல் ஆர்த்தோபீடிக்ஸ்:பற்களை சீராக்குதல், மாற்றியமைத்தல், சதைகளை அகற்றுதல்.
* பீரியோடான்டிக்ஸ்: பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள், திசுக்கள் தொடர்பான நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல்.
* பிடொடான்டிக்ஸ்: குழந்தைகளுக்கான பல் மருத்துவத்துடன் தொடர்புடையது.
* பிரோஸ்தோடான்டிக்ஸ்:செயற்கை பற்களுக்கு பதிலாக புதிய பற்களைப் பொருத்துதல்.
* கான்சர்வேட்டிவ் டென்டிஸ்ட்ரி அண்டு எண்டோடான்டிக்ஸ்:
உடைந்த பற்களை செராமிக் காம்போசைட், அல்ட்ராசோனிக், ஏர் வாட்டர் கூலண்ட் போன்றவற்றை பயன்படுத்தி சீர்செய்வது.
* டென்டல் அனெஸ்தெசியாலஜி:பல் நோய்களால் ஏற்படும் வலிகளை வலி நிவாரணம் மூலம் குணமாக்குவது பற்றிய படிப்பாகும்.
* ஓரல் பயாலஜி:இத்துறையில் பற்கள் மற்றும் முகசீரமைப்புடன் தொடர்புடைய" கிரானியோ பேசியல் பயாலஜி' துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.
* காஸ்மெட்டிக் டென்டிஸ்ட்ரி: பற்குழிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை பற்றிய படிப்பாகும்.
* பாரன்சிக் ஓடொன்டாலஜி:சட்டத்தில் பல் அமைப்பு தொடர்பான ஆதாரங்களை பயன்படுத்த தகவல்களை சேகரித்து தரும் படிப்பாகும்.
* ஜிரியாட்ரிக் டென்டிஸ்ட்ரி:வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல்.
நன்றி:தினமலர்
Engr.Sulthan
உடன்குடி(குலசை) அனல் மின் நிலையத் திட்டம்.


மீண்டும் உயிர் பெற்றது உடங்குடி(குலசை) அனல் மின் நிலையத் திட்டம். இறுதியாக தமிழக முதல்வர் ரு 8000 கோடி தமிழக அரசின் பங்கு மூலதனமாக மின் வாரியத்திற்கு அளித்து இதை மாநில அரசின் திட்டமாகவே தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 2008ல் தொடங்கப்பட்ட இத் திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே இது வரை இருந்து வந்தது. இப்போது மீண்டும் தொடங்க இனி எந்தவித தடையும் (கூடங்குளம் அனு மின் நிலையம் போல்) இருக்காது என நம்புவோம். இத் திட்டம் மூலம் 1600 MW மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பது நம் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி. பூங்கொத்து கொடுத்து (இவ்விசயத்தில்) பாராட்டுகிறோம் நம் முதல்வரை.
ஒரு செய்தி: இத்திட்டம் தொடங்கப்படும் இடம் குலசேகரப் பட்டினம் (குலசை)என்ற எங்கள் ஊரின் எல்கையில் அமைந்துள்ளது. திட்டத்தின் பெயர் தான் உடங்குடி. அவ்வளவே. சில மாதங்களுக்கு முன் தமிழ் விக்கீப்பீடியாவில் இதைப் பற்றி விரிவாக (குலசேகரப் பட்டினம் அனல் மின் திட்டம் என) எழுதினேன்., அதுவும் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.இதைப் பற்றி தமிழக அரசுக்கும் தகவல் அனுப்பியிருந்தேன். உடங்குடி என இத் திட்டத்திற்கு பெயர் வரக் காரணம், பழைய அரசு வருவாய்த் துறை ரிகார்டுகளில், குலசேகரப் பட்டினத்தின் சில இடங்களும், இத்திட்டம் அமைந்துள்ள இடமும் உடங்குடி கிராமத்தில் அமைந்திருப்பதாக உள்ளதால், அரசும் இத்திட்டத்திற்கு உடங்குடி அனல் மின் திட்டம் என பெயர் வைத்து விட்டார்கள். ஆனால் இத்திட்டம் முழுக்க முழுக்க எங்கள்(குலசை) ஊரில் தான் அமைந்திருக்கிறது என உரிமையோடு உரக்கச் சொல்வேன்.
தூத்துக் குடி மாவட்டக் காரர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலசேகரபட்டிணம் தமிழ்நாடுதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.
இங்கு புதிதாக புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும், பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2x800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி; முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலயத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரனங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.



குலசை சுல்தான்


1 comment:

  1. ஓம்
    வணக்கம். என்னுடைய பற்கள் விழுந்தபோது அனைத்தையும் நீக்கிவிட்டு பற்கள் செயற்கையாக கட்டினேன். புதிய பல் டெஞ்சர் வாயில் வைத்து சோதனை செய்யும்போது பல் மருத்துவர் ஆங்கிலத்தில் sixty seven, sixty eight, sixty nine என்று மும்முறை சொல்லச் சொன்னார். சொன்னேன். வாய் கழுவி மருத்துவர் என்னை எழச் சொன்ன போது அவரிடம் கேட்டேன். ஐயா! அந்தச் சொற்கள் என்ன மந்திர வார்த்தைகளா? அதற்கு என்ன முக்கியத்துவம்? என்ற போது அவர் குறிப்பிட்டார்,” அந்த எண்களின் பெயர்களின் உச்சரிப்பின் போது பற்கள் தாடையை இறுக்கி டெஞ்சரை நன்கு பதிய வைக்கும்” என்றார்.
    நன்றி வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete