Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 21, 2015

உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ராம் கார் சீனாவில் தயாரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ட்ராம் வண்டிகள் இயங்குகின்றன. அவை பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்குகின்றன. ஆனால் தற்போது அங்கு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ட்ராம் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. லியாங் ஷீயான்யிங் தலைமையிலான என்ஜினீயர்கள் குழு இக்காரை உருவாக்கியுள்ளனர். இது மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடயது. இந்த காரில் மொத்தம் 60 இருக்கைகள் உள்ளன. 380 பேர் வரை பயணம் செய்யலாம். 

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்காதிங்க!


ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல மாரடைப்பு இருக்குறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. இதுல என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

Thursday, March 19, 2015

கோதுமையின் மகத்துவங்கள்


தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை.

Tuesday, March 17, 2015

அறிவியல் செய்திகள்


( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.