கிலோ 160 ரூபாய்... மாசத்துக்கு 240 கிலோ... செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!
பூக்கள் என்றதுமே... பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்... என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!