Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 22, 2014

ராம்பால் ஆசிரமத்தில் ஆயுதக்குவியல்!


சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் இருந்து அதிரவைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசார் கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் ராம்பாலின் ஆதரவாளர்கள் 'போர்' தொடுத்தனர். இதனால் ராம்பால் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

பன்னிரண்டாவது மாடியிலும்...பலே விவசாயம்!


இயற்கை மீதும்... விவசாயத்தின் மீதும் நமக்கு காதல் இருந்தால்... எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், சென்னை மாநகரத்தில் வசிக்கும் நிர்மல் கிஸான். 'எக்ஸ்னோரா' எனும் அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் இவர், கோயம்போடு மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் வானுயுர நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 12-ம் தளத்தில் உள்ள தன்னுடைய வீட்டில், விவசாயம் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்-முழுக்க முழுக்க இயற்கை முறையில்!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


தூக்கமின்மை நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிடணும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறியலாம்.

செர்ரி பழம்


கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். 

பறக்கும் மீன்கள்



   பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-2


"பொது ஊழியர் (அதாவது முதலமைச்சராக) ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ. - சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங் களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது. 
ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. 

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி


மும்பை: இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அதனை உடைக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியது.

Friday, November 21, 2014

வீட்டுக்கொரு வைத்தியர்...நொச்சி

 பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1


ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!!! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" ‪
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட் டுள்ளது என்பதை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம்!

"ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்" - இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் என்ன சொல்ல வந்தேன் என்பது உனக்குப் புரியும்.

இலந்தைப் பழம்


சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்

உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்; 13-வது இடத்தில் மும்பை

துபாய்: உலகின் டாப் 15 நகரங்களில் துபாய் முதலிடத்திலும், 13வது இடத்தில் மும்பையும் இடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் நகரங்களில் நிலவும் சுறுசுறுப்பான பொருளாதாரம், தனி நபர் வாழ்க்கைதரம், அன்றாட செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் முன்னாள் மாணவர் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் டாப் 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Thursday, November 20, 2014

அள்ளிக் கொடுக்கும் அலகாபாத் கொய்யா...


கொய்யாப்பழம்ம்ம்ம்... கொய்யாப்பழம்ம்ம்ம்ம்...''
-பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலெல்லாம் நீக்கமற ஒலிக்கும், இந்தக் குரலை முந்திக் கொண்டு கொய்யாவின் வாடை மூக்கைத் துளைக்க... நாக்கைச் சுழற்றிக் கொண்டு வாங்கிச் சுவைக்கத் தயங்க மாட்டோம் நம்மில் பலர். காரணம்... அதன் சுவை அப்படி!

வாய்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? இதோ மணத்தக்காளி மருந்து



பொதுவாக கீரை வகைகள் கண்களுக்கும் உடல் அரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதுபோல் கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி. இதற்கு மணித்தக்காளி, மிளகு தக்காளி எனவும் அழைப்பதுண்டு. இந்தக் கீரையில், புரதச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைய உள்ளன.
பல மகத்துவங்களை கொண்ட இந்த மணத்தக்காளியை நாம் வீட்டிலேயும் வளர்க்கலாம். இப்போது இதன் பயன்களை பற்றி பார்ப்போம்.

மஞ்சள் காமாலையை விரட்டியடிக்கும் நார்த்தங்காய்


பொதுவாக காய்கள் நம் உடல் அரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதிலும் காய் வகைகளில் ஒன்றான நார்த்தங்காயை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. மேலும் நார்த்தங்காயின் வேர், மலர் மற்றும் கனிகளும் பயன்கொண்டவை.

ப்ளாஸ்டிக் - தடை செய்


ப்ளாஸ்டிக் - பேராபத்து

உடனடியாக பின்பற்ற வேண்டியநடவடிக்கைகள் :

1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில்சமைக்க வேண்டாம்
2) ஃப்ரிட்ஜின் உறை பெட்டியில் தண்ணீர்பாட்டில்கள் வைப்பதை தவிர்க்கவும்.
3) மைக்ரோ அவனில் உணவு பொருள்களைப்ளாஸ்டிக் உறையில் இட்டு வைப்பதைதவிர்க்கவும்.

மேற்கூறியுள்ள அறிவுறைகளை ஜான்ஹாப்கின்ஸ் என்பவர் தனது அண்மை செய்திஅறிக்கையில் வெளியிட்டுள்ளார்இதே தகவல்வால்டர் ரீட் ஆர்மி மருத்துவ மையத்தாலும்அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் கேஸ்டில் மருத்துவமனையைசார்ந்த உடல்நல திட்ட மேலாளர் டாக்டர்எட்வர்ட் ஃபூஜி மோட்டோ இது போன்ற சுகாதாரதடையை குறித்து ஒரு தொலைகாட்சிநிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

பால் நல்லது? கெட்டது!


ஜீவித்த முதல் நொடி தொடங்கி வாழும் கடைசி நொடி வரையிலும் கணக்கிட்டுப் பார்த்தால் பல்வேறு வடிவங்களில் பல்லாயிரம் லிட்டர் கணக்கான பாலை உட்கொள்கிறோம். இந்தியாவின் தேசிய பானமாக இருக்கும் தேநீரின் அத்தியாவசியமான மூலக்கூறு பால்தான். மனித வாழ்வியலோடு இரண்டறக் கலந்த அம்சமாக விளங்குகிற பாலில், தண்ணீர் கலப்படம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவமே, சமீபத்தில் பரபரப்புச் செய்தி. இதன் தொடர்ச்சியாக பாலில் தண்ணீர் மட்டுமல்ல... மைதா மாவு, அரிசி மாவு, சீன பவுடர், யூரியா போன்றவையும் கலக்கப்படுகின்றன என்று வெளியான பட்டியலோ, பால் விரும்பிகளை விழி பிதுங்க வைத்தது. இந்நிலையில் பொதுவாகவே பால் நல்லதா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.

Wednesday, November 19, 2014

ரத்த விருத்திக்கு... பேரீச்சம்பழம்

கோயில்களில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஓர் அமிர்தம் பேரீச்சம்பழம். பல மருத்துவக் குணங்களைக்கொண்ட பேரீச்சையின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார், கோவை கிணத்துக்கடவு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் சசிகலா.

நம்ம ஊரு வைத்தியம் - கடுகு


'கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!' காரம் மட்டுமில்லீங்க... அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே... புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!

வெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்...


 வெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்...
நம் வசதிக்கு ஏற்ப, வாய்ப்பிருக்கும் ஓர் ஊரில் மனை வாங்கிப்போடுவதில் தப்பில்லை. ரியல் எஸ்டேட் துறை எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அதே அளவுக்கு மோசடிகளும் நிரம்பி இருக்கிறது. நமக்கு சம்பந்தமே இல்லாத வெளியூரில் வாங்கும் சொத்துக்களைப் பராமரிக்க ஆளில்லாமல் மோசடிக்காரர்கள் கையில் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அந்த இடத்தைப் பார்க்கச் சென்றபோது, அந்த இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு, அடாவடி அதிகரித்துவிட்ட நிலையில் வெளியூரில் இடம் வாங்கிப் போட்டுள்ளவர்கள் கவனிப்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்திரா காந்தி


ஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ்வைத்துவங்கி நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது.

கஷ்டத்தில் கை கொடுக்கும் தென்னை

0
"
"தானுண்ட நீரை தலைமேல் தருவது தென்னை'' பெத்த பிள்ளை சோறு போடா விட்டாலும் நட்டபிள்ளை சோறு போடும்'', - போன்ற நம்பிக்கை கேரள மக்களிடம் அதிகம் உள்ளது. புஞ்சை பயிர்களான எள், கொள், கடலை, காய்கறிகள், பருத்தி, பயறு, அவரை, துவரை, மொச்சை, மிளகாய், மல்லி, கடுகு என பயிர் செய்யும்போது, தென்னை மரங்களை வரப்புப் பயிராக நட்டு வைப்பார்கள். அதுவாக வளரட்டுமே என்று நெல் நட்ட வயல் பரப்புகளிலும் நட்டார்கள்.

முன் மாதிரி பெண் சமூகம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவாக முன்மாதிரி பெண்மணிகள் என்றால் நாம் அறிந்தவைகளில் அன்னை ஹதீஜா (ரலி), அன்னை ஆயிசா (ரலி), அன்னை பாத்திமா (ரலி) அவர்களை பற்றியே நம் இஸ்லாமிய பெண்கள் அறிந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வீரத்தாலும், அறிவாலும், வணக்க வழிபாடுகளிலும் முன்மாதிரியாக இருந்தவர்கள் இன்னும் பல ஸஹாபியப் பெண்மணிகள் என்பது வரலாற்று சான்றாக உள்ளது.

Tuesday, November 18, 2014

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

''நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மறந்து, ஜங் ஃபுட்டுக்கும், ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் மாறிவிட்டோம் என்கிற புலம்பல் இப்போது அதிகமாகக் கேட்கிறது. ஆனால், பாரம்பரிய உணவுப் பழக்கம் என்ன என்பதை, அப்படிப் புலம்புபவர்களே முழுதாக அறிந்திருப்பதில்லை. புராண காலம், வரலாற்றுக் காலம், மன்னர் காலம் தொடங்கி தற்காலம் வரை, நம் மூதாதையர்கள் வகுத்துவைத்த உணவுப் பழக்கம் படிப்படியாக அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், இழந்து வந்துள்ள சிறப்புகளையும் பேசவேண்டியது அவசியம்!''

மறதியை மறக்க 7 வழிகள்

6

ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. 

பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree)



 பிரேசில் திராட்சை மரம் (Aboticaba Tree) தெற்கு பிரேசில் பசுமையாகவும் மிகவும் அடர்த்தியாகவும் வளரும் மரம் இது. இந்தமரம் உலகின் பல வெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் இலைகள் சிறு ஈட்டி போல் உள்ளது. இது அதன் சொந்த நாட்டில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் போது 3-5 மீட்டர் வரை வளர்கிறது.

விரல் நுனியில் மருத்துவ சேவை


அவசர உதவிக்கு 108 உதவுகிறது என்றால், மருத்துவ உதவிக்கு மட்டுமல்லாமல் உளவியல் ஆலோசனைக்கும் கைகொடுக்கிறது 104. மருத்துவம் சார்ந்த தகவல், மருத்துவ - உளவியல் ஆலோசனை, சுகாதாரம் சார்ந்த புகார் ஆகியவற்றுக்குத் தொடர்புகொள்ளும் வகையில் 2013 டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது இந்தச் சேவைப் பிரிவு. இதுவும் 24 மணி நேர சேவைப் பிரிவுதான். தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

தேவையற்ற முடி வளராமல் தடுக்க...


ஆண்களைப் போல் பெண்களுக்கும் முகம், கை, கால்களில் முடி வளர்வது அதிகரித்திருக்கிறது. இதற்கென பியூட்டி பார்லர்களிலும் வேக்ஸிங், த்ரெட்டிங் செய்யப்படுகிறது. தொடர்ந்து பார்லர்களில் போய் த்ரெட்டிங், வேக்ஸிங் செய்து கொள்வதால், அந்த இடங்களில் முடி தடிமனாகவும், முன்பை விட அதிகமாகவும் வளர்கிறதே என்பது தான் பெரும்பாலான பெண்களின் கவலை....

மீல் மேக்கர் கட்லெட்

Ingredients

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
    முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
    உப்பு உருளைக்கிழங்கு - 2
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    பட்டை -1 siriyatu
    கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை
    புதினா இலை

கோழி மசாலா


Ingredients

  • கோழி - 1/2 கிலோ
  • தக்காளி,பச்சை மிளகாய் - 2
  • சின்ன வெங்காயம் - 6
  • தனி மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • சோம்பு,பட்டை,சீரகம் - சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை




ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE)

What-is-Airplane-Modeமொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE) – நீங்கள் அறியாத பயனு ள்ள‌ அரிய தகவல்கள்
ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல் லை. எனவே இது குறித்து கவ லைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியா த நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின் றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம்.

Monday, November 17, 2014

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

தாவரங்களில் அற்புதங்கள்



   
   
 ஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால்தான் ஆப்பில் தண்ணீரில் மிதக்கிறது.
   வெள்ளரி எண்பது காய்கறி கிடையைது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகையைச் சார்ந்தவையே!

தேன் அத்தி


 

தேன் அத்திப் பழமானது ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் உண்ணக்கூடிய பழமாக உள்ளது. சீன மொழியில் பிக் என்று அழைக்கப்படுகிறது. பிக் என்பது சின மொழியில் பூவில்லாமல் காய்ப்பது என்பது பொருள் ஆகும். ஆனால் அத்திப்பூவில் பூ உள்ளது. கனியான பிறகு பூவானது விதையாக மாறுகிறது. அத்திப்பழம் பல நிறங்களில் கிடைக்கிறது.

ஒரு கப் சூப்!


"பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கோங்க... ஹெவியா சாப்பிடாதீங்க, லைட்டா சாப்பிடுங்க" எந்த நோய்க்கும் டாக்டர்களின் அட்வைஸ் இது.  

ஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’


அதிக பணிச்சுமை, மன அழுத்தம், மாசு படிந்த சுற்றுச்சூழல் எனப் பல காரணங்களால் உடலும் மனமும் கெட்டு, ஓய்வின்றித் தவிக்கிறோம். இதை மனதில் வைத்து, ஆங்காங்கே மசாஜ்
சென்டர்கள், ஸ்பாக்கள் பெருகிவிட்டன. ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் என ‘ஸ்பா’ நடுத்தர மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இனி அந்த நிலை இல்லை. தமிழக அரசின் கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பாக, சென்னை குறளகத்தில் இயற்கை ஸ்பா மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆடம்பர ‘ஸ்பா’க்களில் செய்யப்படும் அதே சிகிச்சைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே செய்யப்படுகின்றன.

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டு...பிரச்னைகளையே உண்டாக்கும்!

‘ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக்காதவர்களே இல்லை. இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன் படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல் அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டதுதான். இந்தக் கசப்பான அனுபவத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்துவிட்டனர். ஆனால், இப்படி செய்வது கூடவே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவசாலிகள்.

அலுவலகத்தில் நீங்கள் யார்?


 உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்!
அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.

சொக்கவைக்கும் சோலார் மோட்டார் சைக்கிள் !

மதுரை டி.வி.எஸ் பள்ளி ஒன்பாதாம் வகுப்பை சேர்ந்த தியாகராஜ், ஹரிபிரசாத், அனிருத்தன் ஆகிய 3 மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான சோலார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு!

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்' என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்' என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள்.

சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்!

கட்டுரைக்குள் நுழையும் முன்பு, தயவு செய்து பேனாவை எடுங்கள். கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றிய பதிலை 'டிக்’ செய்யுங்கள்.

கேள்வி 1. உங்கள் 10 வயது மகள், பிறந்தநாளுக்கு அத்தை கொடுத்த 100 ரூபாயைத் தொலைத்துவிட்டாள்.  நீங்கள் என்ன செய்வீர்கள்?

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?


Tamil_News_3882976770402சென்னை: தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில கவர்னர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத்தலாம்.
இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்தி கொள்ளலாம்.
சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்க பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, November 16, 2014

எப்.ஐ.ஆர் மிஷின்

பெங்களூரு: வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இனிமேல் பெங்களூருவாசிகள் போலீஸ் நிலையம் போக அவசியம் கிடையாது; அதற்கு பதிலாக, சாலைகளின் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மெஷின் போன்ற பிரத்யேக இயந்திரத்தின் மூலமாகவே எப்.ஐ.ஆரை பதிவு செய்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுபோன்ற வசதியை முதன்முறையாக பெறப்போவது இந்தியாவின் 'ஐடி கேப்பிட்டல்' என்று அழைக்கப்படும் பெங்களூருதான். 

காஃபி (Coffee)


காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின.  

   ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த   சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள்.

ரம்புத்தான் பழம்



    ரம்புத்தான் பழம் இது ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள்.
   இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏராளமாக உள்ளன.  தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது.

டிராகன் பழம் (Dragon Fruit )


    டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன்.  இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை "நைட் ராணி" என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தலையணை – அறியப்படாத சுற்றுலாப் பகுதி!


தலையணை பகுதி அமைந்துள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு தோற்றம்
தலையணை – நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மனதை மயக்கும் அமைதியான சூழல் கொண்ட பகுதி.

டெல்லி சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில்

புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம்.