Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 2, 2012

KIWI யின் மருத்துவப் பண்புகள்

KIWI(சீனத்து நெல்லிக்கனி) யின் மருத்துவப் பண்புகள்

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது:

மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:

ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.


உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து! உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்:

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு:

 
சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். 

இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர். இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன.

கண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா!!!

அழகான கண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா!!! கவனமா இருங்க... 
ஆரோக்கியமான உணவு சாப்பிடாததால பார்வை குறைபாடு நிறைய பேருக்கு இருக்கு. அப்படி இருக்கிறவங்க யாரும் கண்ணாடி போட விரும்ப மாட்டீங்குறாங்க. ஏன்னா அது அவங்களோட அழக கெடுக்குதுன்னுதான். அதுக்கு பதிலா இப்ப புது டிரென்டா கான்டாக்ட் லென்ஸ் போடுறாங்க. கான்டாக்ட் லென்ஸ் போட்டா மட்டும் பத்தாது, அதை போடுறவங்க கவனமாவும் இருக்கணும்.
கான்டாக்ட் லென்ஸ் போடுறங்களுக்கு கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல், இதுலாம் எதுக்கு வருது? ஏன்னா அவங்க அதை போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதுனால அவங்க கண் தான் பாதிக்கப்படும். ஏனென்றால் கண் ரொம்ப சென்ஸிடிவ், அதை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். கான்டாக்ட் லென்ஸயும், அதை போடும் போதும் என்னென்ன ஃபாலோ பண்ணணும்-னு பாக்கலாமா!!!
1. கான்டாக்ட் லென்ஸ் போடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். கழுவியதும் கையை ஒரு சுத்தமான துணியால் துடைத்துப் பிறகு தான் லென்ஸ் போடணும்.
2. கான்டாக்ட் லென்ஸ் எப்படி போடணும்-னு கொடுத்திருக்கிற இன்ஸ்ட்ரக்ஸன்-அ நல்லா படிச்சு, அது மாதிரி செஞ்சா லென்ஸ் ஆனது ரொம்ப நாள் வரும்.
3. மிகவும் முக்கியமான ஒன்று, லென்ஸ் போடும் முன்னும், போட்டு எடுத்து வைக்கும் முன்னும் அதை கொடுத்திருக்கும் மருந்தால் மறக்காமல் கழுவ வேண்டும். இந்த மருந்து லென்ஸில் பாக்டீரியா இருந்தால் அழித்து விடும். மேலும் கண்களில் எந்த ஒரு நோயும் வராது.
4. லென்ஸை கண்ட இடங்களில் வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் அந்த பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
5. லென்ஸை கழுவும் மருந்தின் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். ஏனென்றால் மருந்தின் தேதி முடிந்தும் உபயோகித்தால் அது கண்களையே பாதிக்கும். ஆகவே அதன் தேதியை கவனிப்பது மிகவும் முக்கியம்.
6. இப்ப மார்க்கெட்-ல கான்டாக்ட் லென்ஸை கழுவுவதற்கு மருந்துகள் பல வந்துள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்வு செய்து உபயோகிக்கணும்.
7. குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும் போதும் கண்டிபாக கான்டாக்ட் லென்ஸை கழட்டி வெக்கணும்.
8. மேப் கப் போடும் முன் கான்டாக்ட் லென்ஸை போட்டு தான் போட வேண்டும்.
9. மேக் கப் கலச்ச அப்புறம், கையை ஒரு ஆன்டி பாக்டீரியல் சோப்பால கழுவிட்டு, சுத்தமான துணியால கையை துடைச்ச அப்பறம் தான், கான்டாக்ட் லென்ஸை கண்ணுல இருந்து எடுக்கணும்.
10. கான்டாக்ட் லென்ஸை போட்டு வெயில்ல போகும் போது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர் நேரா கண்ணுல படக்கூடாது. அப்ப கண்ணுக்கு சன்கிளாஸ் அல்லது தொப்பி போட்டு போக வேண்டும்.
நன்றி:போல்ட்  ஸ்கை

Thursday, May 31, 2012

MS-Word-ல் text to table வசதி

MS-Word-ல் text to table வசதி


வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலபேர் MS-word உபயோகித்துக் கொண்டிருப்போம். இதில் அடங்கியுள்ள வசதிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் TEXT TO TABLE வசதி..

இதில் உள்ள TEXT TO TABLE வசதியின் மூலம் உங்களுடைய டெக்ஸ்ட்டை டேபிளாக convert செய்துகொள்ள முடியும்.

text to table in ms-word
இதற்கு Insert மெனு சென்று table ஆப்சனை கிளிக் செய்து அதில் தோன்றும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு டாக்குமெண்ட்டில்

ராமன் tamil 50 english 56 science 70
பவளம் tamil 50 english 56 science 70

என இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதை டேபிளாக மாற்ற வேண்டும் முதலில் டேபிளாக மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டை தேர்வு செய்துகொள்ளவும்.
பிறகு Insert=>table=>convert text to table என்பதை கிளிக் செய்யவும்.
தோன்றும் விண்டோவில் separate text at என்பதில் உள்ள ஆப்சன்களில் உங்களுக்கு டேபிள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
உதாரணமாக ஒவ்வொரு வார்த்தையும் ஒரு coloum ஆக மாற்றப்பட வேண்டும் எனில் other என்பதில் கிளிக் செய்து அந்த கட்டத்தில் ஒரு Sapce மட்டும் தட்டுங்கள். நான் கீழிருக்கும் டெக்ஸ்ட்டை டேபிளாக மாற்ற அவ்வாறு செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு space இடைவெளி இருக்கும் என்பது பொதுவான விதி. அதன்படி நான் இதை டேபிளாக மாற்றியிருக்கிறேன்.

மாற்றப்பட்ட டெக்ஸ்ட் டேபிளாக கீழே..

ராமன்
tamil
50
english
56
science
70
பவளம்
tamil
50
english
56
science
70

மேலும் உங்களுக்கு எத்தனை column - எத்தனை row இருக்க வேண்டும் என்பதை Number of columns, Number of Rows என்பதில் எண்களை உள்ளிட்டு நீங்கள் தீர்மானிக்கலாம். இறுதியாக ok என்பதைச் சொடுக்கினால் நீங்கள் விரும்பியபடி உங்களுடைய டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்பட்டிருக்கும்.

இதில் tabs என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு டேப் இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

Paragraph என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Paragraph இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

Commas என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Comma இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

இவ்வாறு உங்களுடைய டெக்ஸ்ட்டை நீங்கள் Ms-word ஐப் பயன்படுத்தி எளிதாக டேபிளாக மாற்றம் செய்துகொள்ள முடியும். பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..!

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!


Read more: http://www.thangampalani.com/2012/05/ms-word-text-to-table.html#ixzz1wSYAFBCX

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்!!!
மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான்
click the below link to download
http://www.4shared.com/document/E4_Qo0N0/Tamil_Medicines.html



Engr.Sulthan

92 Ways to Keep Your Heart Healthy


92 Ways to Keep Your Heart Healthy

The primary causes of heart attack stems from inappropriate nutrition, low levels of physical activity, high levels of stress and smoking. These result in high blood pressure, diabetes and high blood cholesterol, which lead to a heart attack. Dr. Christian Barnard, credited with doing the first human transplant surgery in 1967, spent the latter years of his life preaching lifestyle change to avoid heart attacks. Here are some of the tips taken from several of his books on how to have a healthy heart.
  • Eat in moderation. Stop eating while you are still hungry.
  • Diets depress and irritate you. Dieting often leads to nutrient deficiencies.
  • Weight reduction cannot happen without physical exercise.
  • More important than weight loss, is fat loss.
  • Don’t deny yourself the foods you like. Just eat them less often.
  • Have soup before a meal. You will then eat less. Eat less, but more often. This increases metabolism.
  • Fish meat contains omega fatty acids. These are good for the heart.
  • Eat fresh vegetables and fruits daily. Refrigerated vegetables lose between 50 to 60 percent of their nutrients.
  • Fruits and vegetables eaten daily lower the risk of cancer and heart attacks, while protecting against illness and infection.
  • The secret of a Mediterranean diet is lots of fruit, vegetables, wine, olive oil, physical activity and a stress-free life.
  • Eat balanced meals. Eat only if hungry. Do not snack.
  • Don’t reuse cooking oils.
  • Don’t get too worked up if your cholesterol levels are slightly high. Smoking and being overweight is probably worse than having moderately high cholesterol.
  • Garlic, fish, wine and exercise are weapons against cholesterol.
  • Tomatoes, lemon, spinach, carrots, broccoli, onions and garlic reduce cholesterol and fight free radicals damage. A mixture of a fruit and vegetable juice will give you the antioxidants you need to rid your body of free radicals and toxins.
  • You must have a multi-vitamin and multi-mineral pill daily.
  • Be relaxed while eating.
  • The night time meal must be light.
  • Alcohol should be consumed in moderation.
  • If you don’t like alcohol, you don’t have to have it.
  • Drinking red wine reduces the probability of heart ailments by up to 60 percent, and also protects against strokes. It is good for the blood, has a positive effect on cholesterol and also against atherosclerosis.
  • Alcohol helps in dissolving dangerous clots in the blood.
  • Alcohol can raise the level of good HDL cholesterol.
  • Wine cannot alter the consequences of smoking or not exercising.
  • 90 percent of all situations that cause us stress are trivial and inconsequential.
  • Stress currently affects women more than it does men.
  • Stress can motivate and challenge us.
  • Be a dreamer, but set yourself attainable goals. Don’t be a perfectionist. Accepting that you are not perfect reduces you blood pressure and stress.
  • Learn to delegate.
  • Show emotion (grief, anger, joy). By suppressing your emotions, you increase your risk of heart attack.
  • Those who hire and fire have the highest risk of heart attacks amongst executives. Those that fire take it more to heart, than those who have been fired.
  • The colder the season, the more the heart attacks.
  • Avoid undue time spent on TV, computers and pets in your bedroom.
  • People with pets have less heart problems than those without pets.
  • Watching Television is one of the main causes of obesity.
  • Cell phones are addictive and cause stress.
  • Do not make your mobile your constant partner (at dinner, in the toilet, at the movies).
  • A cheerful, tolerant disposition reduces heart problems.
  • Laughter therapy has been scientifically proven as good for health. Laughter reduces blood pressure, stress, cancer and heart problems.
  • Having the courage to admit a mistake helps you gain confidence and conviction.
  • Women respond more calmly than men to aggression.
  • Share your problems by talking things over.
  • Think positively, be an optimist.
  • Happily married people are the least likely to have heart attacks. Lonely people run a greater risk of not surviving a heart attack.
  • Maintain old friendships and make new friends. The more your friends, the greater your health.
  • Anger can be fatal for cardiac patients. Anger counseling is known to reduce recurring hostility and stress by over 70 percent.
  • Faith can prolong your life – they strengthen the immune system. Active religious believers live eight to ten years longer than those who don’t.
  • Belief and a positive mental attitude can be the difference between success and failure in cancer and cardiac recovery.
  • Have an annual medical check-up. It is the most fundamental rule of good health.
  • While your week belongs to your office, your weekend belongs to your family.
  • Your day belongs to your work; your evenings belong to you to do as you wish.
  • A stress filled job requires a lazy holiday. A monotonous job requires hiking and trekking in your vacation.
  • Having a two or three week holiday is good for your family and for your health.
  • Your work either satisfies you, or it will make you ill. More than 50% of employees suffer from job related stress.
  • People who are yelled at in the workplace take more sick leaves.
  • Stressful jobs are responsible for heart attacks. When your job depresses you – Quit.
  • Office politics and canteen gossip cause major stress to hardworking employees.
  • Feel free to praise yourself - very few others will.
  • Keep your job options open. Loyalty is old fashioned in this modern world.
  • Surround yourself with capable people at work.
  • An afternoon siesta is good for the heart and the brain. A 30-minute nap improves memory and performance.
  • Too little sleep is bad for the heart. Too much sleep is indicative of depression.
  • A person who sleeps less will have higher levels of blood pressure. People who sleep less have up to 70 percent poorer health than those who sleep sufficiently. People, who suffer sleep deprivation, lose up to 25% of their intellectual capacity.
  • Lack of sleep reduces the body’s immunity. Eight to nine hours sleep a day is best. Sleep and get up at the same time all days. Never sleep with anger on your mind.
  • Set goals, targets and objectives, and strive to reach them collectively. Share your concerns and stresses – don’t bottle up.
  • Breathe deeply while stressed. Counter office stress by going for short walks every hour.
  • Flowers, plants and an aquarium relieve stress. Stretch and yawn often, this reduces stress.
  • Music is a balm for the soul and is good for the heart. Music reduces stress.
  • According to research, sudden loud noise, or continuous low level irritating sound is an independent cardiac risk factor.
  • Traffic noise and machinery sounds increase adrenaline, affect blood composition, and increase the risk of heart attacks.
  • Nature’s sounds, water flowing and birds chirping are known to calm the heart.
  • Every 10 seconds, someone somewhere is dying of cigarette smoke. 35% of all heart related deaths are directly related to cigarette smoke.
  • Cigarette smoke contains 4000 different substances that are harmful to the body, brain and heart. Accordingly to World Health Organisation, smokers have a higher risk of cancer and cardiac ailments.
  • Smoking causes high blood pressure. The carbon monoxide in tobacco smoke inhibits the good cholesterol and raises the levels of bad cholesterol.
  • Women who smoke and are on contraceptive have a much higher risk of heart attacks.
  • Smokers who exercise increase their chances of surviving a heart attack. Coordinate your ‘quit smoking’ regimen with a programme of sports activity and you will improve your chances of success.
  • Every hour that you walk increases your lifespan by as much.
  • Sport helps the body battle all diseases including cancer and heart attacks.
  • Exercise releases happiness endorphins in the body, keeping you trim and healthy, while also improving the quality and length of life.
  • Exercise reduces blood pressure, reduces cholesterol and reduces diabetes. It also battles stress.
  • Exercisers survive heart attacks. Exercise strengthens all the muscles of the body including the muscles of the heart.
  • Exercise for 30-60 minutes daily at a moderate intensity. One hour of exercise utilises one meal.
  • Frequent blood donation every three to six months, is good for the heart.
  • Nothing is better for the heart than making love frequently. Sex relieves tension and releases the feel-good hormone in the body.
  • Sexually active men and women live longer, but sex outside of a loving relationship can be harmful to the body.
  • Like exercise, for sex to be beneficial, it must be regular. Twice a week is as good for the heart as exercising every day.
  • Every day activities such as climbing stairs, carrying the groceries, gardening etc are good for the heart. Daily household activities, such as making the beds, cleaning the house etc. cuts your risk of heart attack by half.
  • Laziness and being sedentary constitutes the same cardiac risk as high blood pressure and smoking. Regular exercise strengthens the heart, and reduces heart activity by a million heart beats each month.
  • Start your exercise gradually (by warming up) and do not stop your exercise abruptly (do a gradual cool down). This manages the heart rate and blood pressure.
  • Exercise improves circulation, reduces body fat, improves cholesterol, strengthens the bones, combats depression, reduces blood pressure, reduces stress, overcomes insomnia, and increases self confidence.
  • Swimming is as good, if not better than running as an exercise. Golf for executives balances the stresses of work.
  • Never delay a good health resolution (to reduce weight, quit smoking, exercise, etc). Always start immediately. Not tomorrow, or next week, or next year. Start NOW.

Preventing Heart Disease: Know Risk to No Risk

The World Health Organisation, World Heart Federation and the World Bank are all unanimous in their verdict – India is suffering huge economic burdens due to heart and blood vessel diseases (principally heart attacks and strokes). Over 3 million Indians presently lose their lives annually due to these diseases and the toll is expected to rise to over 5 million in 2020. Nearly half of these deaths occur under the age of 70 years. India lost 9.2 million potentially productive years of life due to heart disease related deaths occurring prematurely in the age group of 35-64 years in 2000. This loss will reach 17.9 million years by 2030. In comparison with USA, India’s loss was 570% more in 2000 and will be 940% more in 2030. A country that wishes to position itself as a major economic power in the 21st century cannot afford such hemorrhaging of precious human resources in the prime of their life. While socio-economic transitions (living habits altered by urbanisation and globalisation) and demographic transitions (increasing life expectancy, with more deaths occurring at older age) contribute to the rise in the risk of heart diseases, much of the risk is avoidable. Many of the deaths due to heart attacks and strokes can be prevented or at least postponed to a much older age, with very few succumbing before 80 years. Our ability to prevent the onset of these diseases and slow down their progression depends on the knowledge of the factors which increase or decrease the risk of developing disease. Extensive scientific evidence from several countries clearly demonstrates that behavioural risk factors like an unhealthy diet, physical inactivity, tobacco consumption and stress lead to elevation of biological risk factors like blood pressure cholesterol (and other harmful fats) and sugar. Increased body weight and an expanding waist circumference mediate between these behavioural and biological risk factors. All of these risk factors operate along a continuous risk gradient – it is better to have a blood pressure of 120/80 than 130/85 which is preferable to 140/90 or more. Since the mid-range values occur in maximum numbers of people in any population, more heart attacks arise from the many people who have modest elevation of risk factors than in the few who have very high levels (akin to C K Prahlad’s book Base of the Pyramid). When many risk factors co-exist, the risk is additive. Thus, many people with ‘mild’ elevation of several risk factors end up with a high risk of heart attacks. It is important for doctors to do a full risk profiling of all major risk factors to estimate the composite or ‘absolute’ risk of developing a heart attack or stroke in the near future. Based on that estimate of individual risk, decisions on lifestyle advice and drug therapy can be customised. Every contact between a healthcare provider and one seeking healthcare must be utilised for risk assessment and ‘missed opportunities’ for early detection must be minimised in primary healthcare.
People must recognise that many of these risk factors can be prevented or reduced by exercising intelligent choices. Keeping away from tobacco significantly reduces the risk of a heart attack, while smoking excessively magnifies the risk posed by high blood pressure or diabetes. Reducing salt consumption reduces the number of deaths due to strokes by 22% and those from heart attacks by 16%. Avoiding unhealthy fats, reducing refined sugars and increasing the intake of fruit and vegetables further reduces the risk substantially. Physical inactivity increases the risk by 1.5 times while even moderate activity, regularly performed, is very good. With such healthy habits, risk factors such as body weight, belly fat, blood pressure, blood sugar and blood fats can be kept under check. The World Health Organisation believes that 75% of the risk can be prevented by such measures. It is also useful for adults, especially those with a family history of premature heart disease, to undertake regular check-ups for identification of risk factors and estimation of the ‘absolute’ risk. ‘Knowing the risk’ means that the person concerned as well as the physician can take effective measures to reduce it. Through a judicious combination of lifestyle measures (always needed) and drugs (whenever needed), much of the risk can be avoided or reversed. It is then very much possible to proceed to a ‘No Risk’ status. That is why the theme for the World Heart Day adopted in 2008 - “Know Your Risk” is very relevant.

Engr.Sulthan

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு



இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்கள்)- பாகம்-2

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைப்படங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டின் பழைய புகைப்படங்கள் உங்களுக்காக ---இதோ- -
Train in 1940Ambulance - சென்னை -1940மயிலாப்பூர்- சென்னை - 1939சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்)மெரினா கடற்கரை - சென்னை- 1913காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939 Bank of madras - சென்னை - 1935Car Showroom - சென்னை - 1913 VT Station - மும்பை - 1894பல்பொருள் அங்காடி - 1883மும்பை - 1894அந்தமான் -1917Hooghly - கொல்கத்தா- 1939Power plant - 1917ஊட்டி- தமிழ்நாடு- 1905A waiter A school boyமவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி - மார்ச் 25- 1947ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமாணம் எடுத்தல்..1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில்1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில் கூடிய கூட்டம்.1948- மகாத்மாவின் இறுதி ஊர்வலத்தை காண மக்கள் கூட்டம் -
 
Engr.Sulthan

How to kill DENGUE Mosquitoes?

How to kill DENGUE Mosquitoes, the Cheapest and Easiest Way at home or office








Mosquito Trap - A Cheap Way
It may not be very useful for killing mosquitoes in USA but it seems most useful for 3rd World Countries. Plz don't forget to forward this message as much you can, it may save someone's LIFE.

Forwarded by a doctor. It might be useful.
CAUTION:
This information may cause massive loss of jobs in insecticides companies, but it could save thousands of innocent lives from the cruel fate of dengue.

DIY is so easy and its costs are unbelievably negligible.
Eradicate Aedes and dengue.

FIGHTING DENGUE MUST START AT EVERY HOME.
Mosquito trap (Dengue prevention)

Its just a mix of water, brown sugar and yeast.

1. Cut a plastic bottle in half, keep both parts. Can be soft drink bottle.
2. Take the lower portion of the bottle. Dissolve the brown sugar in hot water.
Let it cool down to ~70 deg F.
3. Add the yeast. Carbon dioxide will form(This will attract the mosquitoes.Mosquitoes find you by following the carbon dioxide you exhale..) 4. Cover the bottle with a dark wrap and insert in the top portion upside down like a funnel. Place it in a corner in your house.
5. In 2 weeks you will be surprised by the number of mosquitoes killed.
web sources
Engr.Sulthan

Wednesday, May 30, 2012

ஹாய் நலமா-1 நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?


நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....

வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

மூட்டு நோய்களோடு வாழ்தல் பற்றி மேலும் படிக்க இது இணைப்பு.

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.


இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும்
  • கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.
  • அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்.
  • கோபம் வரலாம்,
  • எரிச்சல் ஏற்படலாம்,
  • கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.
  • இவை எதுவும் இல்லையேல் 'இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை' என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.

இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே
  • தொடர்பாடலை குறைக்கிறது.
  • கலந்துரையாடுவது விட்டுப் போகிறது.
  • இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது.
  • இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன்.
  • இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது.
  • நம்பிக்கை இறுக்கமாகிறது.
  • உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்கினால்
  • அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
  • விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும்.
  • மன விரக்தியும் ஏற்படலாம்
என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.


உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது.
  • வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மறையான உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது.
  • வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.


பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர் என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

'பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில்
  • ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள்.
  • ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது
என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்' என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research குழவினர் சார்பில் Laura Leong கருத்து கூறியுள்ளார்.
உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா மற்றவரில் அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை.
  • மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும்.
  • பரிவு காட்ட வேண்டும்.
  • ஆறுதல் சொல்ல வேண்டும்.
  • ஒத்தாசை செய்ய வேண்டும்.


அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.


SOURCE: American Pain Society, news release, December 2011
Engr.Sulthan

சுய தொழில்கள்-24 சணல் பொருட்கள் தயாரிப்பு

சணல் பொருளில் சூப்பர் லாபம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



‘சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை போத்தனூரில் சணல் பைகள் தயாரித்து வரும் பரிதா. அவர் கூறியதாவது:

எனது அக்கா அனார்கலி 10 ஆண்டுக்கு முன்பு மத்திய சணல் வாரியம் அளித்த பயிற்சியில் சணல் பொருட்கள் தயாரிக்க கற்று கொண்டு சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.இதையே பெரிய அளவில் செய்ய முடிவு செய்து, வெற்றி மகளிர் சுய உதவி குழுவை துவக்கி, கடன் உதவி பெற்றோம். 3 தையல் மெஷின்கள் மூலம் பல்வேறு சணல் பொருட்களை தயாரித்தோம். மகளிர் குழு தலைவியாக நான் உறுப்பினர்களுடன் சேர்ந்து தைக்கும் பணியில் ஈடுபடுகிறேன். மாதம் ரூ.1.6 லட் சம் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். பொருட்களை விற்க டவுன்ஹால் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறோம். உற்பத்தியில் பாதி அங்குதான் விற்பனையாகிறது. மீதியை வெளியிடங்களுக்கு சப்ளை செய்கிறோம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். உற் பத்தி, கண்காட்சி, கடை ஆகியவற்றில் சுழற்சி முறையில் பணிபுரிகிறோம். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறுகிறோம். தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம். அனைத்து வகை சணல் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக் வருகிறேன். என்னிடம் கற்று பலர் தொழில் துவங்கியுள்ளனர்.
உற்பத்தி செலவு சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஒரு நபர் ஒரு நாளில் 12க்கு 12 இஞ்ச் அளவுள்ள 10 ஹேண்ட் பேக், 10க்கு 10 அளவுள்ள 50 தாம்பூல பை, 13க்கு 12 அளவுள்ள 10 காலேஜ் பேக், 13 இஞ்ச் அளவுள்ள 25 வாட்டர்பேக், 3 ஷெல்ப் உள்ள 25 லெட்டர் பேட், 12க்கு 10 அளவுள்ள 30 லஞ்ச் பேக், 3 மடிப்புள்ள 15 பர்ஸ், 13க்கு 9 அளவுள்ள 25 பைல், 13க்கு 9 அளவுள்ள 10 லேப்டாப் பேக், 18க்கு 12 அளவுள்ள 20 ஷாப்பிங் பேக், 10க்கு 8 அளவுள்ள 20 சுருக்கு பை, 40 பென்சில் பவுச், 30 கிட் பவுச், 30 மொபைல் பவுச் இவற்றில் ஏதாவது ஒரு வகையை தயாரிக்க முடியும்.எதை உற்பத்தி செய்தாலும் ஒரு நாள் செலவு ரூ.1000. மாதம் 25 நாட்களுக்கு ரூ.25 ஆயிரம். இதர செலவு ரூ.5 ஆயிரம் என மாத உற்பத்திக்கு ரூ.30 ஆயிரம் தேவை.
வருவாய்: மாதம் ரூ.25 ஆயிரம் செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75 சதவீத லாபத்தில் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.43 ஆயிரம், லாபம் ரூ.18 ஆயிரம். விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷி ன்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.
சந்தை வாய்ப்பு: வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, டிபார்ட்மென்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.
உற்பத்தி பொருட்கள்: சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)
கிடைக்கும் இடங்கள்: சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். விலை குறைவு. இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.
தயாரிக்கும் முறை சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும். லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை. இலவச பயிற்சி: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் மத்திய சணல் வாரிய கிளைகள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டண முறையில் தனியார் பயிற்சி அளிக்கின்றனர். முதலீடு: உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும். பவர் தையல் மெஷின் ரூ.10 ஆயிரம், கட்டிங் டேபிள் ரூ.3 ஆயிரம், கத்தரிக்கோல் ரூ.250, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் ரூ.10 ஆயிரம் போதும்.

இணையத்திலிருந்து
Engr.Sulthan

சுய தொழில்கள்-23 பேக்கரி தொழில்

பேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்





டந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.

தயாரிப்பு முறை:

மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.

அனுமதி:

பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கட்டடம்:

ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.

இயந்திரம்:

ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.


மற்ற செலவுகள்:

ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீரும் மின்சாரமும்:

20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.


மூலப்பொருள்:

இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.

வேலையாட்கள்!

இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.

முந்தைய செலவுகள்:

பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

செயல்பாட்டு மூலதனம்:

முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.


சந்தை வாய்ப்பு!

உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

ரிஸ்க்:

ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.

சாதகமான விஷயம்:


பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.

தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது. பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?











Engr.Sulthan