Dragon Mart:
துபாயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டிராகன் மார்ட் (Dragon Mart). துபாய்க்கு வெளியில், ஏறத்தாழ 40 கி.மீ தூரத்தில் இண்டர் நேஷனல் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டிட அமைப்பே டிராகன் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது ஒரு வியப்பாகத் தானிருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஷோ ரூம், 2500 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் என பறந்து விரிந்து காணப் படுகிறது. இதன் மொத்த நீளம் 1.2 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் பிரமாண்டத்தை. இது 2004ல் கட்டி முடிக்கப் பட்டது.