Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 22, 2015

மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்


டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘மாரடைப்புச் சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்’ நூலில் இருந்து பயனுள்ள சில பகுதிகள்:
ஒருவருக்கு மாரடைப்பு வந்த பின்னர், முதல் 60 நிமிடங்கள் அவருக்குப் `பொன்னான நேரம்’. இந்த நேரத்துக்குள் நவீன சிகிச்சைகள் தரக்கூடிய, அதாவது, கேத்லேப் வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைச் செய்துகொண்டால், 100 சதவீதம் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி, இதயத் தசைகள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள் ! மின்சாரம்… பெட்ரோல்… கேஸ்… சூப்பர் 100 டிப்ஸ்!


மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை வீட்டுத் தேவைக்காக வாங்கிக் குவிக்கும்போது, அவற்றை இயக்கும் கரன்ட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பெரும்பாலானவர்கள் இங்கு யோசிப்பதில்லை. ஆனால், கரன்ட் ‘பில்’லை பார்த்த பின்புதான், ‘ஐயோ’ என அலறல் போடுவார்கள். இதே கதைதான்… டூ-வீலர், ஃபோர் வீலர், சமையல் கேஸ் என தினம் தினம் எரிபொருளுக்காக நாம் செலவழிக்கும் தொகையும். இதெல்லாம் மாதக் கடைசியில் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி பயமுறுத்தும்போது ‘பக் பக்’ என்றிருக்கும்!

Sunday, April 19, 2015

சூப்பரான சிக்கன் 65


தேவையான பொருட்கள்: 
இஞ்சி சிறு துண்டாக நறுக்கியது               5
உரித்த வெள்ளைப்பூண்டு பல்                    7
தனி மிளகாய்ப் பொடி                                  3 ஸ்பூன்
மஞ்சள் பொடி                                                1/2 ஸ்பூன் 
கேசரி பவுடர் (ஆரஞ்சு)                                1சிட்டிகை
கட்டித் தயிர்                                                   1/4 கப்
சுத்தம் செய்த கோழிக் கறி                          1/2 கிலோ
உப்பு தேவையான அளவு
பொறித்தெடுக்கத் தேவையான எண்ணெய்

முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்

தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்  மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த  பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும். இதனை உலகம் முழுவதும் பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில், வியட்னாம், இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரி பயிரிடப்படுகிறது.  முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது