Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 9, 2013

இந்தியாவில் இஸ்லாம்19

யார் அஞ்சுவண்ணத்தார்?
அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.
இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.

இந்திய முதல் பெண் மணிகள்...


இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்). 
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்). இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி.

Magic Tricks Revealed: Fist Squeeze Coin Vanish


How to perform the two dollar trick


World's Best Banana Trick


Jumping Egg Trick


Sunday, December 8, 2013

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்:-



இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது.

வெங்காய பாசி பயறு தோசை


தேவையான பொருட்கள்:

பாசி பயறு - 2 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு

மேலே தூவுவதற்கு...

வெங்காயம் - 1

செல்போன்களால் கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை: நிபுணர் தகவல்

 
கடந்த வியாழனன்று தலைநகர் புதுடெல்லியில் 'மொபைல் போன்களும், பொது சுகாதாரமும்- மித் அண்ட் ரியாலிட்டி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உலக சுகாதாரக் கழகத்தின் கதிரியக்க நிபுணரான மைக்கேல் ரெபசோலி கலந்துகொண்டார். இவர் சுகாதாரக் கழகத்தின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் முதல் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

இந்தியாவில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..

Photo: இந்தியாவில் முதன்முதலில்  இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..
 
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.அப்படி வந்த அரேபிய இஸ்லாமிய கூட்டத்தினரின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்க விரும்புவதாகவும் அதானால்  அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள்

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். 

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது..

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். 

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.இந்தியாவில் முகலாய ஆட்சி வட இந்தியாவை  எட்டும் முன்னமே தென் தென் இந்திய தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர்..மேலும் இஸ்லாம் இந்தியாவில் ஒன்றும் வால் முனையில் பரப்பட்ட மார்க்கமும் இல்லை.

மன்னர் சேரமான் இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றிய இன்னும் சில தகவல்களும்  உள்ளன...

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். 

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். 

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.அங்கே வைத்து மன்னர் இஸ்லாத்தை ஏற்றதாக பதியப்பட்டுள்ளது..எது எப்படியோ இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் மன்னர் சேரமான் அதுவும் தமிழர்  என்பதற்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை..
இந்தியாவில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

இந்தியாவில் இஸ்லாம்18

செப்பேடு தரும் செய்தி
தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…
Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.

Saturday, December 7, 2013

வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்:-


1422437_632083686813950_654297891_n.jpg
* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.

இந்தியாவில் இஸ்லாம்17

செப்பேடு தரும் செய்தி
முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.
இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

Friday, December 6, 2013

ஆபத்தான அஜினோமோட்டோ


16286_520138958081495_1653225714_n.jpg
கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது.

இந்தியாவில் இஸ்லாம்16

செம்பேடு தரும் சான்றுகள்..
சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் – ஐயன் காட்டு

Thursday, December 5, 2013

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-


1381566_631913840164268_1415677008_n.jpg
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை

 பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை
தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை.

பாலூட்டிகளைத் தெரியுமா?

 
உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.
# பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.

விலங்குகள் புரியும் விந்தைகள்

 
நமக்குப் பசியெடுத்தால் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் விலங்குகள்? ஒன்றையொன்று சார்ந்து வாழ்கிற வாழ்க்கைதான் விலங்குகளுக்கு. இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே அவற்றின் வாழ்க்கைமுறை. சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை வைத்தே, இரையாகாமல் தப்பித்துக்கொள்ளும்.

இந்தியாவில் இஸ்லாம்15

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்
மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பள்ளிகளிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.

Wednesday, December 4, 2013

அல்சர் அவதியா..?


சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!!!

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். டீன்-ஏஜ் பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் ஸ்டைல் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இது இழிநிலை!

 
தகவல் தொழில்நுட்பத்தின் இன்றியமையாத அங்கம் நூலகமாகத்தான் இருக்க முடியும். இணையதளத் தேடுதல் பொறி (சர்ச் எஞ்சின்) க்குள் நூலகங்கள் அடங்குகின்றன என்பது உண்மைதான் என்றாலும், புத்தகங்களின் தேவை என்பது இன்றியமையாததாகத்தான் உலகம் முழுவதும் தொடர்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, புத்தகங்கள்தான் இன்றளவும் தகவல் பெட்டகங்களாகவும், அறிவுக் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.

ஓரவஞ்சனை!

 
கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்களை விவசாய நிலங்களின் ஊடாகப் பதிக்க இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்துக்கு ("கெயில்') அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.