Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 16, 2014

விலாங்கு மீன்களால் 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமாம்!



உருண்டு, நீண்ட உடலுடன் காணப்படும் விலாங்கு மீனைப் பத்தி தெரிந்திருக்கும் . பார்ப்பதற்கு பாம்பு போன்று இந்த மீன் இருக்கும். விலாங்கு மீனில் பல வகையான வினோதங்கல் உண்டு. அதில் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்’ என்ற விலாங்கு மீன் ஒன்று உண்டு ,
இந்த விலாங்கு மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது இதனுடைய மேற்புறம் கரும் சாம்பல் நிறத்துலயும், அடிவயிறு மஞ்சம் நிறத்துலயும் இருக்கும். சேத்துக்கு அடியில வாழ விரும்புற இந்த மீன், வெளிக்காற்றையும் சுவாசிக்கும். அதாவது, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல வந்து காற்றைச் சுவாசித்து விட்டு, மறுபடியும் சேத்துக்கு அடியில போயிடும்.

‘ஜிம்னோடிடே’ குடும்பத்தைச் சேர்ந்த இது, சுமார் 2.5 மீட்டர் நீளத்துக்கு வளரும். பொதுவா, ஒரு மீட்டர் நீளமுடைய மீன்கல் தான் அதிகமா இருக்கும். சுமார் 20 கிலோ எடை வரைக்கும் இந்த மீன் வளரும். இந்த மீன், ஷாக் அடிக்குற அளவுக்கு ஏறக்குறைய 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

இதற்காகவே அதோட உடம்புல 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எலக்ட்ரோபிளேட்டுகளும் இருக்குது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டிய உணவு மீனை அதிர்ச்சியடைய வைத்து உணவு மீனை செயல் இழக்க வைத்து பிடிக்கும், எதிரி மீன்கிட்ட இருந்து தற்காத்துக்கவும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

No comments:

Post a Comment