Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 26, 2015

சிக்கன் வடை

என்னென்ன தேவை?

சிக்கன்  - கால் கிலோ
முட்டை - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 6
இஞ்சி - சிறியதுண்டு
சிறிய வெங்காயம் - 10 பல்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

எப்படி செய்வது?

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியதாக நறுக்கவும். இஞ்சி, சிறிய வெங்காயம் ,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன், நறுக்கின வெங்காயம் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் நறுக்கின கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய்ப்பூவையும் சேர்க்கவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக மாவை எடுத்து, வடைகளாக தட்டிப் போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். தாச்சியின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு 4 அல்லது 5 வடைகள் தட்டிப் போடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து வடைகள் வெந்ததும் எடுத்து விடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இதனைச் செய்யவும்.

No comments:

Post a Comment