Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 20, 2015

நீரை கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டுமா??



உலகத்தில் உள்ள அனைத்து வைத்தியர்களும் மற்றும் டி.வி., பேப்பர் ஆகிய அனைத்து ஊடகங்களும் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடியுங்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி தண்ணீரை யார் யாரெல்லாம் கொதிக்க வைத்து குடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்? நீரில் நோய் கிருமிகள் உள்ளது, அதனால் உடலில் நோய் வரும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் நாம் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம்.

சரி. ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு லிட்டர் நீர் அருந்துகிறோம்? இரண்டு அல்லது மூன்று லிட்டர். இந்த மூன்று லிட்டர் தண்ணீரில் எவ்வளவு நோய்க்கிருமிகள் இருக்கும். ஆனால் நாம் மூக்கின் வழியாக ஒரு நிமிடத்திற்கு எட்டு லிட்டர் வீதமாக ஒரு நாளைக்கு 11,600 லிட்டர் காற்றைக் குடிக்கிறோம். காற்றில் நோய்க்கிருமிகள் இருக்காது என்று யாராவது கூற முடியுமா? நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள குப்பை, கூளம், தூசி பாக்டீரியாக்களும், வைர°களும் நம்முள் செல்கிறது. ஒரு நாளைக்கு குடிக்கும் 2 லிட்டர் தண்ணீரில் நோய்க்கிருமி இருக்கும். அதனால் நோய் வரும் என்று கூறுகிறார்களே? 11,600 லிட்டர் காற்றை குடிக்கிறோமே, இதன் மூலமாக நமக்கு நோய்கள் வராதா?

ஜப்பானில் உள்ள ஒரு நோய்க்கிருமி 10 நாட்களாக காற்றின் வழியாகப் பறந்து வந்து உங்கள் மூக்கின் வழியாக உங்கள் உடம்பிற்குள் செல்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்கிறதா? தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். காற்றில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? தண்ணீரைக் கொதிக்க வைத்தால் நோய்க்கிருமிகள் இறந்து விடும் என்பது உண்மை. தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதும் உண்மை. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் தான் நோய்க்கிருமிகள் இறந்து விடும் என்பது உண்மை என்றால் யார் யாரெல்லாம் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கிறீர்களோ நீங்கள் இனிமேல் உங்கள் உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்லக் கூடாது என்றால் காற்றையும் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டிய பிறகே நீங்கள் குடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்தக் காரியத்தை செய்ய முடியுமா? எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கும். காற்றிலும் நோய்க்கிருமிகள் இருக்கும். 3 லிட்டர் தண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடலில் நோயை உண்டுபண்ணும் போது 11,600 லிட்டர் காற்றில் உள்ள கிருமிகளும் கண்டிப்பாக நோயை உண்டுபண்ணும் அல்லவா? அந்தக் காற்றின் வழியாக செல்லும் நோய்கிருமியை உடம்பு என்ன செய்கிறது?

இந்தப் புத்தகத்தில் தடுப்பு ஊசி என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்ளை நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்து விடும். உடலில் எந்த நோய்க்கிருமி சென்றாலும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மை அந்த நோய்க்கிருமியை அழித்து விடும். இதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை. அப்படி இருக்கையில் காற்றின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளை என்ன செய்கிறதோ, அதையே தான் நீரின் வழியாக உள்ளே செல்லும் நோய்க் கிருமிகளையும் உடம்பு செய்யும். எனவே நீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதில் எந்தப் பயனும் கிடையாது.

குடிக்கும் நீரில் நீர் பிராணன் உள்ளது. உயிர்ச்சக்தி உள்ளது. இது கண்ணுக்குத் தெரியாது. மேலும் குடிக்கும் நீரில் பல தாதுப் பொருட்களும், விட்டமின்களும் உள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுகிறது. குடிக்கும் நீரில் தாதுப்பொருட்கள், உயிர்ச்சக்தி, நோய்க்கிருமி இது மூன்றும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் நோய்க்கிருமி இறந்து விடுகிறது. ஆனால் அதே சமயத்தில் உயிர்ச்சக்தியும் அழிந்து விடுகிறது. தண்ணீரில் இருக்கும் அனைத்து தாதுப் பொருட்களும் ஒன்று ஆவியாகிப் போய்விடுகிறன அல்லது பிணமாக மிதக்கின்றன.இப்படி உயிருள்ள தண்ணீரை, தாதுப் பொருட்கள் உள்ள தண்ணீரைக் கொதிக்க வைப்பதனால் நாம் சப்பைத் தண்ணீராக மாற்றுகிறோம். இப்படித் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதனால் அந்தத் தண்ணீரால் ஒரு மனித உடம்புக்கு எந்த ஒரு இலாபமும் கிடையாது.

எனவே நம் இரத்தத்தில் உள்ள பல தாதுப் பொருட்கள் பற்றாக் குறையாக இருக்க ஒரே காரணம் நாம் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது தான். உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இருக்கலாம். அதை உறுதி செய்வதற்கு ஒரு சின்ன சோதனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடி கட்டிய தண்ணீரை ஊற்றி அதில் மீனை விட்டால் மீன் அன்றே இறந்து விடும். ஒரு மீன் கூட வாழ வழியில்லாத உயிர்ச்சக்தி இல்லாத பிராண சக்தி இல்லாத ஒரு நீர் தான் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிய நீர். எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது.

சுனாமி, வெள்ளம், எபிடெமிக் என்ற கொள்ளை நோய்கள் வரும் கால கட்டங்களில் ஊரில் உள்ள அனைத்து நீர்களும் மாசுபட்டிருக்கும். இந்த நேரத்தில் ஊரில் உள்ள நீரில் ஆடு, மாடு இறந்து கிடக்கும். மண்ணாக இருக்கும், ஒரு சில நேரத்தில் மனித சடலங்கள் கூட கிடக்கலாம். இது போன்ற தருணங்களில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டி தான் குடிக்க வேண்டும். இது Emergency Period என்ற அவசர காலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மற்றபடி சாதாரண வாழ்க்கையில் இப்பொழுது நாம் இருக்கும் இடங்களில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவசர காலங்களில் அந்த அழுக்குத் தண்ணீரை குடிப்பதால் நோய் வரும் என்பதற்காகக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடி கட்டிக் குடியுங்கள் என்று, என்றோ யாரோ ஒரு நாள் பிரச்சாரம் செய்த விஷயத்தை நாம் நல்ல விஷயம் என்று தினமும் பயன்படுத்துவது உடலுக்கு நோயை உண்டுபண்ணும்.

நம் உடலுக்கு இரண்டு வகையில் தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்து பொருட்களும் செல்கின்றன. ஒன்று நீரின் வழியாக, மற்றொன்று உணவின் வழியாக. நீரைக் கொதிக்க வைப்பதன் மூலமாக அவற்றை விரட்டியடிக் கிறோம். மேலும் உணவைச் சமைப்பது மூலமாக குறிப்பாகக் குக்கரில் சமைப்பது மூலமாக, மற்றும் இன்டக்ஷன் ஸ்டவ் எனப்படும் எலக்ட்ரிக் ஸ்டவ்வில் சமைப்பது மூலமாக அந்த உணவில் உள்ள அனைத்து சத்துப் பொருட்களையும் நாம் வெளியேற்றி விடுகிறோம். ஒருவருடைய உடலில் இரத்த சோதனை செய்து பார்க்கும் பொழுது அந்த தாதுப்பொருள் இல்லை, இந்த தாதுப் பொருள் குறைவாக இருக்கிறது என்று கூறுவதற்கு காரணம் என்னவென்றால் தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பதும், வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதும், குக்கரில் சமைப்பதும், எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் மைக்ரோ ஓவன் மூலமாக சமைத்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே ஏற்படுகிறது. எனவே இன்னும் இது போன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும். வாழ்வோம் ஆரோக்கியமாக !
-
ஹீலர் பாஸ்கர்

No comments:

Post a Comment