Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 1, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(10)
மழை நீரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு பசிக்கு உணவளிப்பாய் யா அல்லாஹ்!
#######################################################

ஆங்கிலம் தவறுதலாக பேசிவிடுவோமோ என்று வெட்கப்படுபவர்கள், தங்கள் தாய்மொழி தமிழை தவறுதலாக பேசுவதற்கும்,எழுதுவதற்கும் வெட்கப்படுகிறார்களா?
###############################
ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீத என்றென்றும் நிலவட்டும்மாகுக.
அவர்களுக்காக .....
1.முதல் தக்பீருக்குப் பின்,
... _____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....
அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
ஆதார நூல்:- பைஹகி ,4/39
3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601
பொருள்: இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
இதை மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள். அதிகம் அதிகம் SHARE செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கும் உதவி செய்வானாக. ஆமீன்...

#########################################################

நம்மால் அழிக்கப்பட்ட ஒவ்வொன்றின் அவசியத்தையும் இயற்கை ஏதாவது ஒரு வழியில் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது...!!!
###############################################################

மழை வெள்ளத்தில் குப்பையோடு குப்பையாக அடித்துச்செல்லும் குடிசைகள் ஏழை மக்களின் தீர்ந்திடாத அவல நிலை...
###############################################################

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாம இலவசத்தை மட்டுமே நம்பினால் இப்படித்தான் இருக்கும் நாட்டோட நிலைமை.. அரசாங்கம் இனியாவது திருந்துமா?

###########################################################
இந்த மாதிரி அசாதாரண கால நிலைகளில் மக்களின் சிரமம் கருதி இரண்டு வேளை (மக்ரீஃப், இஷா) தொழுகைகளையும் கூட்டாக ஒரே நேரத்தில் பள்ளிகளில் தொழ வைக்கலாமே!
நான் சவுதியில் இருக்கும் போது பல வேளைகளில் தொழுதிருக்கிறேன்..
ஒரு பள்ளியின் முத்தவல்லியிடம் இதை கேட்டேன்..
அவர் உடனே நீங்கள் அந்த குரூப்பா? என்கிறார்..நான் முஸ்லிம் குரூப் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்..
அப்படி ஒரு சலுகை இருப்பதே அவருக்கு தெரியவில்லை பாவம்...
மழையும் சேறுமாக இருந்தபோது இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள் . பாங்கு சொல்லும்போது கடைசியில் அவரவர் இடத்திலேயே தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அது எப்படி என்று சில நபி தோழர்கள் கேட்க
என்னையும் உன்னையும் விட சிறந்தவர் முஹம்மது ஸல் அவர்கள் செய்து காட்டிய வழி என்றார்கள்.
########################################
அடர் கரு மேகம் சூழ்ந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் போல...
இப்போதைய சென்னை நிலவரம்:
சென்னையை சூழ்ந்தது மழை வெள்ளம்...புழல் ஏரி உடைந்தது... அடையாற்றில் வெள்ளம்.. செம்பரம்பாப்க்கம் ஏரி உடையும் நிலையில் உபரி நீர் திறப்பு....சென்னை நீரில் மூழ்கி தத்தளிக்கிறது..எல்லா ரயில்களும் ரத்து.. சென்னையிலிருந்து புறப்பட்ட அனைத்து வெளியூர் பஸ்களும் தாம்பரத்தில் நிறுத்தம்...வெளித் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனித் தீவானது சென்னை.###########################################################################################################################
வெள்ளத்தால் சென்னை கூவம் சுத்தமாகி நீர் ஓடுகிறது! இப்படியே இதை கழிவு நீர் கலக்காமல் தூய்மையாக பராமரிக்கலாமே!
‪#‎நமது‬ நேரம் தற்போது செயலற்ற அரசு...
ட்விட்டரில்
படம் புதுப்பேட்டை கூவம் ஆறு


############################################################
ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்றைய வெள்ள நிலமை:
Engr Sulthan

No comments:

Post a Comment