Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 20, 2016

பல ஆறுகள், என் பிள்ளைகள்!திருவள்ளூர் ஆறு, சத்திரம் ஆறு, நரசிங்கபுரம் ஆறு, பேரம்பாக்கம் ஆறு என்று 25 சிற்றாறுகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அந்தந்த ஊர்ப் பெயரோடு ஓடினாலும் அவற்றுக்கான சுவையான நீர் ஆதாரம் நானே என்பதால், அவை அத்தனையும் இந்தக் கூவத்தின் பிள்ளைகளே.


பாலாறு, கொசஸ்தலை என்று பெரிய பெரிய ஆறுகளும் வெயில் காலங்களில் என் இருப்பு நீரை உள்வாங்கி வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது, காலத்தால் அழிக்க முடியாத தண்ணீர் வரலாறு. இருளஞ்சேரி, எட்டிக் குட்டிமேடு, குமாரஞ்சேரி இப்படி ஒன்பது கிராமங்களைச் சேர்த்த மொத்த பெரிய கிராமத்தின் பெயர்தான் என் பெயர், ஆமாம்... கூவம் கிராமம்.

‘ரத்தக்கண்ணீர்’ என்ற சினிமாவில் எம்.ஆர்.ராதா, ‘அந்த ஆப்பிள் அழகிகளின் அருகாமையிலே, ‘தேம்ஸ்’ நதியின் தீரத்திலே...’ என்ற திருவாரூர் தங்கராசுவின் வசனத்தைப் பேசுவார். வட தமிழ்நாட்டில் ஓடுகிற ஒரே ஜீவநதி நான்தானே, ஏன் அவர் தேம்ஸை சொல்ல வேண்டும்? பெரிதாய் காரணம் ஒன்றுமில்லை. என் இயற்கையான அழகின் மீது கொட்டி மூடப்பட்ட அசிங்கங்கள்தான் அவர்களை தேம்ஸ் பக்கம் திரும்ப வைத்ததே.

1967 - 72-ல் அண்ணா, ஐந்தாண்டுத் திட்ட வடிவைக் கொண்டுவந்தார். அப்புறம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைதி. 2001-ல் மத்திய அரசின் உதவியோடு சீர்படுத்துவதாகஜெயலலிதா திட்டம் போட்டார். 2009-ல் துணை முதல்வர் பொறுப்பிலிருந்த மு.க.ஸ்டாலின் கூவத்தைச் சீரமைப்பது தொடர்பாகத் திட்டமிட வெளிநாடு போனார். அதற்கு முன்னதாக, 2008-ல் என்னைச் சீரமைக்க அறக்கட்டளை ஒன்றையே நிறுவினார். மீண்டும் 2012-ல் ஜெயலலிதாவே ‘என்னை’ பாதுகாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து பின், அவர் முடிவை அவரே 2013-ல் மாற்றிக்கொண்டார். என் ஓட்டப் பாதையில் 105 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடையில்லா ஓட்டமாக்க 300 கோடி ரூபாயில் திட்டம் போட்டிருக்கிறார்... இன்னும் ஏதேதோ திட்டங்கள் போட்டு கோடிகளை ஒதுக்கியிருப் பதாகச் சொல்கிறார்கள். யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள்ளத்தானே முடியும்.

பல சினிமாக்களில், ஊட்டாண்டே வந்தாக்கா மூஞ்சிமேல அட்சிப்புடுவேன், பேமானி, சோமாறி... ன்னு ஒருத்தன் பேசுறான். இன்னொருத்தனோ, ‘இன்னாடா கஸ்மாலம், கூவம் கணக்கா கூவுறே’ங்கறான்... சினிமாவில் எதையெதையோ இப்படித்தான் புரியாமல் காமெடி என்கிற பெயரில் கொட்டித் தீர்க்கிறார்கள். கூவம் என்ன அத்தனை அவலமா... அத்தனை நாற்றமா? என்னைச் சீரழித்தவர்கள்தானே நாற்றத்தின் பிறப்பிடம்?

ஒரே புலம்பலாக இருக்கிறதே என்கிறீர்களா? புலம்பல்தான்... எஞ்சியிருக்கும் கொஞ்ச நீரையாவது நஞ்சு கலக்காமல் காப்பாற்ற முடியாதா என்ற புலம்பல்தான். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். கடலில் போய் ஆக்கிரமிப்பு செய்து பாருங்கள்; கடலில் போய் மண்ணெடுத்து வீடு கட்டிப் பாருங்கள்; ஏன் முடியவில்லை? அது உங்களை விழுங்கும் வாயுள்ள கடல். உங்கள் ஜம்பம் அங்கே எடுபடாது.’’ என்று தன் கதையைக் கூறி முடித்தது அந்தப் பாவப்பட்ட கூவம்!

No comments:

Post a Comment