Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 16, 2012

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டம்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக்கல்வெட்டு உள்ளது. . கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது[1].

திற்பரப்பு அருவி அருகிலுள்ள கோவில்
திற்பரப்பு அருவியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன.
Thirparappu Waterfalls.JPG

திற்பரப்பு நீர்வீழ்ச்சி
குலசேகரம்: கோடையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.

வற்றாத கோதையாறு திற்பரப்பில் அருவியாக விழுவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவி என்ற சிறப்பு திற்பரப்பு அருவிக்கு உண்டு. இதனால் சீசன் காலம் என்று இல்லாமல் எப்பொழுதும் தண்ணீர் விழுவதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு இன்ப சுற்றுலா வருகி்ன்றனர்.

பயணிகளை கவரும் வகையில் பூந்தோட்டம், உல்லாச படகு சவாரிக்கு படகுத்துறை என சிறப்பு அம்சங்கள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக அருவி பகுதியில் வெயில் வாட்டி எடுத்தது. மலைகளில் உள்ள நீரோடைகளில் நீர் ஊற்றுகள் வறண்டு காணப்பட்டது. இதனால் கோதையாற்றில் நீர் வரத்து குறைவாக இருந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்த அளவே விழுந்ததுது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகளிலும் அதையொட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோதையாற்றில் தண்ணீர் அதிக அளவு வரத் தொடங்கியுள்ளதையடுத்து அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.
Engr.Sulthan

No comments:

Post a Comment