Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 19, 2013

புதிய 100 புதிய 100 டாலர் நோட்டு


அதிநவீன சிறப்பம்சங்களுடன்... அமெரிக்காவில் புதிய 100 டாலர் நோட்டு வெளியீடு.!!
****************************************************
இந்த புதிய 100 டாலர் நோட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வெளியிடப்படுவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதமாக நேற்று வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில், மத்திய நிதி மசோதா பிரச்சினையில் இந்தப் புதிய நோட்டுகள் அச்சிடுவதற்கான செலவினங்கள் சேர்க்கப் படாததால் அவற்றை வெளியிடுவதில் தற்போது எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில், கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு டாலர் மற்றும் இரண்டு டாலர் நோட்டுகளைத் தவிர மற்ற அனைத்து மதிப்பிலும் உள்ள நோட்டுகள் கள்ளத்தனமாக அச்சடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் இந்த புதிய நோட்டை அங்கீகரிப்பதற்கு எளிதாகவும், நகலெடுக்க முற்படும்போது கடினமாகவும் விளங்கக்கூடிய வகையில் இதில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ஒரு நீல, 3-டி பாதுகாப்பு நாடா, நோட்டை அசைக்கும்போது செப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறும் தன்மை கொண்ட மையினால் அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் போன்றவை இந்த புதிய டாலர் நோட்டின் பாதுகாப்பு அம்சங்களாகும்.

நோட்டின் பின் புறமுள்ள பெரிய எண்ணான 100லும் இந்தக் கலர் மாற்றம் ஏற்படும் தன்மை, முன்புறமுள்ள 100 என்ற எண்ணிலும் தோன்றும் இந்தக் கலர் மாற்றம் போன்றவை இந்தப் புதிய நோட்டின் சிறப்பம்சங்களாகும்.

மற்ற டாலர் நோட்டுகளைப் போலவே, அமெரிக்க மூத்தத் தலைவரான பெஞ்சமின் பிராங்க்ளினின் படம் புதிய நோட்டிலும் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் பழைய டாலர் நோட்டுகளில் அவரைச் சுற்றி இருக்கும் ஓவல் வடிவம் இந்தப் புதிய நோட்டில் காணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment