Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 4, 2013

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன்
செட்டிநாடு சமையல் என்றால் காரசாரமான, சுவையான அசைவ உணவிற்கு பேர் போனது. அதற்கு அளவுக்கு அதிகமாக பிரியர்கள் இருக்கிறார்கள். அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் எதிர்பார்த்த காரத்தை விட அதிகமாகவே இருக்கும். அந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
சிக்கன் - ஒரு கிலோ
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 3 1/2 ஸ்பூன்
முழு மல்லி - 3 ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
பின் அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்..
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
பின் சிக்கன் நன்கு வெந்ததும், அதன் மேல் சிறிது கொத்தமல்லியைத் தூவி, கிளறி விடவும். இதனால் சிக்கன் ருசியாகவும், மணமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்
இப்போது சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி!!!

No comments:

Post a Comment