Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 16, 2014

எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்

நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்...

எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்!
நீரை.மகேந்திரன்
சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல, புதிய தொழில்களைத் தொடங்கு வதற்கான வழிகாட்டுதல்களையும் நாணயம் விகடன் தொடர்ந்து அளித்து வருகிறது. என்றாலும், என்ன தொழில் தொடங்கினால், நல்ல வளர்ச்சியும் லாபமும் காண முடியும் என்கிற குழப்பம் பலருக்கும் இருப்பது இயற்கைதான்.
எல்லோரும் மிக எளிதாகவும்,  அதிக மூலதனம் தேவைப்படாத வகையிலும் செய்யக்கூடிய ஐந்து தொழில்களை இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ளோம். இந்த ஐந்து தொழில்களில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்கிற ஒரு தொழிலை தேர்வு செய்யுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் பரவா யில்லை; தொழிலில் ஜெயிப்பது தான் ஒரே நோக்கம் என்கிற வெறியோடு, அந்தத் தொழிலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் அதில் வெற்றி காண்பது உறுதி!

இனி உங்களுக்கான ஐந்து தொழில்கள் இதோ...

இந்தத் தொழிலை செய்துவரும் கோவை கணபதியைச் சேர்ந்த ஜே.வி. இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர்
ஜே.மகேஸ்வரனைச் சந்தித்தோம்.

‘‘ஒரு பெரிய நிறுவனத்துக்குத் தேவையான சின்னச் சின்ன தயாரிப்புகளைச் செய்து தருகிறேன். மெக்கானிக் தொடர்பாக படித்திருந்தாலும், பிராக்டிக்கல் அனுபவம்தான் தனியாகத் தொழிலைதொடங்கத் தூண்டியது.
ஆரம்பத்தில் ஒரு மில்லிங் மெஷின் மட்டும் வைத்துக்கொண்டு தொழிலைத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களின் தேவைகள்தான் என்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு வளர வைத்தது.
ஒரு டிசைன் செய்தால், அதன் எல்லா நிலைகளையும் ஒரே இடத்தில் செய்து  தரும்போது, வாடிக்கையாளர்களுக்கு வேலை சுலபமாக முடிந்துவிடும். எனவே, புதிய ஆர்டர்கள் நம்மைத் தேடிவரும். தவிர, ஒரே வாடிக்கையாளரை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் நான்கு வாடிக்கையாளர்கள் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.  உங்கள் அருகாமையில் இருக்கும் பெரிய தொழிலகங்களை நம்பி இந்தத் தொழிலை திட்டமிடலாம். நான் கோவையில் தொழில் செய்தாலும் ஈரோடு, சேலம் என வாடிக்கையாளர்களை வைத்திருக் கிறேன்.

இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்; மத்திய அல்லது மாநில அரசு மானியமும் கிடைக்கும். மாவட்ட தொழில் மையம் வழங்கும் வட்டி மானியமும்  கிடைக்கும். அனைத்து செலவுகளும் போக மாதம் 40 ஆயிரம் வரை வருமானம் வருகிறது’’ என்றார், குதூகலமாக. 
படங்கள்: தி.விஜய்


இந்தத் தொழிலை நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி பவர் நிறுவனத்தின் உரிமையாளர் செ.முத்துக் குமாருடன் பேசினோம்.

‘‘சோலார் மின்சக்தி குறித்து பரவலாக மக்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். மின் தட்டுப்பாடுஎன்பது தவிர்க்க முடியாதது என்கிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க சோலார் மூலம் மின் சக்தி எடுப்பது அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கு மற்றும் சின்னச் சின்ன கடைகள், ஷாப்பிங் சென்டர் களுக்குத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் பெறலாம். 
தவிர, சோலார் பவர் மூலம் இயங்கும் எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர் என இதரப் பொருட்களையும் தயாரிக்கிறோம். இந்தத் தொழிலில் ஈடுபடும் பலரும் விற்பனைக்குப் பிறகான சேவைகளை முறையாகத் தருவதில்லை என்பதால், தொடர்ந்து தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. நான் தொழிலைத் தொடங்கும்போதே சர்வீஸ் சென்டர்களையும் தொடங்கிவிட்டேன். சேவையில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். 
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த கல்வி பின்புலம் இருந்தாலும், தொழிலில் முன் அனுபவம் மற்றும் பயிற்சியே இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தது. இதற்காக மத்திய அரசின் எம்எஸ்எம்இ மூலம் பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் மற்றும் சர்வீஸ் இரண்டிலும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்’’ என்றார் உற்சாகமாக.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.


இந்தத் தொழிலை செய்துவரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஏஎம்என் மைக்ரோ கவரிங் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஜாபர் அலியிடம் கேட்டோம். 
‘‘தங்கத்தின் விலையேற்றம் காரணமாக   தங்க நகைகளை மக்கள் வாங்குவது குறைந்து வருகிறது. தங்க நகைகளைப் போலவே, பொலிவைத் தரும் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
முன்பு பாரம்பரிய முறையில் கைகளால் தயாரான கவரிங் நகைகள், இப்போது நவீன  இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படு கின்றன. இங்கு உற்பத்தியாகும் நகைகளை சென்னை மதுரை என இரண்டு பெருநகரங் களையும் மையமாக வைத்து பல சில்லறை விற்பனையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். காப்பரில் செய்யப்படும் நகைகளை வாங்கி, நாங்கள் தங்க முலாம் பூசுகிறோம். தவிர, ஆர்டர்களுக்கு ஏற்ப செய்தும் தருகிறோம். கழுத்துச் சங்கிலி, நெக்லஸ், ஒட்டியாணம், ஆரம், காசுமாலை என அனைத்துவிதமான நகைகளையும் தயார் செய்கிறோம்.
வட மாநிலங்களிலிருந்து வரும் கல் வைத்த நகைகள்தான் கவரிங் நகைகளுக்குப் போட்டி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, புதிய டிசைன்களை உருவாக்கி னால், தங்க நகைகளுக்கு ஈடாக எப்போதும் எங்கும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும். வங்கிக் கடனும் தொழில் முனைவோர்களுக்கான அனைத்து மானியங் களும் கிடைக்கும். இடம், இயந்திரம் தவிர, முலாம் பூசுவதற்கான தங்கம் வாங்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்’’ என்றார் அவர்.   

இந்தத் தொழிலை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த ஆக்டிவ் டோட்டல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தின் ரா.நந்தகுமாரைச் சந்தித்தோம்.
‘‘நான் முதலில் சேஃப்டி அலாரம் உற்பத்தி செய்து வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தந்து வந்தேன். இந்தத் துறையின் நவீன வளர்ச்சி அடுத்தகட்ட தேவைகளை நோக்கி நகர வைத்தது.
சேஃப்டி அலாரம் என்பது அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. வீடுகள், அலுவலகங்களில் அவசிய கருவியாக மாறிவிட்டது. இன்றைய தேதியில் சிசிடிவி கேமரா உள்ள வீடுகளிலும் அலுவலகங் களிலும் இந்த சேஃப்டி அலாரம் கட்டாயமாக இருக்கிறது. 
இந்தத் தொழிலுக்கு உள்ள வரவேற்பைப் பார்த்து இப்போது கணினி சேவை வழங்கும் நிறுவனங்கள்கூட 'ஹைடெக்' தொழில் நுட்பத்துடன் இந்த சேஃப்டி அலாரங்களை தயாரித்து வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டன. இதை நாம் ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளாமல்,  ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்தத் தொழிலை செய்யலாம். இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடனும் மற்றும் சிறு, குறு தொழில் களுக்கான மாநில அரசின் மானியமும் கிடைக்கும்.
வாடிக்கையாளர் சேவையில் நாம் சிரத்தை யோடு செயல்பட்டால், புதிய வாடிக்கையாளர் கள் நமக்கு நிறையவே கிடைப்பார்கள். இந்த வேலைக்கு மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை அவசியம்’’ என்றார் நம்பிக்கையோடு.
படங்கள்: ப.சரவணகுமார்.  படங்கள்: எஸ்.தேவராஜன்.


சென்னை கொளத்தூரில் இந்தத் தொழிலை செய்துவரும் பிளாஸ்மா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் பூ.மணிவண்ணனிடம் கேட்டோம்.
‘‘நினைவுப் பரிசுகள் இல்லாத விழாக்கள் இல்லை. பரிசுக் கோப்பைகள் தராத போட்டி களும் இல்லை. பரிசுக் கோப்பைகள் தொடங்கி கீ-செயின் என பலவகையான பொருட்களைத் தயாரிக்க முடியும் என்பதால், ஆர்டருக்கு ஏற்ப நாம் தயாரிக்கும் பொருட் களையும் மாற்றிக்கொண்டே இருக்கலாம். இவற்றை ஆர்டருக்கு ஏற்ப செய்து தரலாம். அல்லது நாமே உற்பத்தி செய்து, விற்பனைக்கும் அனுப்பலாம்.

கீ-செயினை பொறுத்தமட்டில், நமது கற்பனைத் திறனுக்கு வானமே எல்லை. பல லட்சம் வடிவங்களில் வடிவமைத்து விற்கலாம். இவற்றை மொத்த விற்பனையாளர் களுக்கு விற்பனை செய்துவிடலாம்.
தவிர, பிளாஸ்டிக் மோல்டிங் துறையில் கால்பதித்து பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்கிறேன். நான் இந்தத் துறையில் 15 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன். எனது நிறுவனத்தின் தயாரிப்பு தமிழகம் முழுக்க மொத்த விற்பனையாளர்களிடம் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கிறேன்.
பொதுத்துறை வங்கிகளில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின்   மானியமும் கிடைக்கும். புதிய டிசைன், மார்க்கெட்டிங் இவை இரண்டும் சரியாக இருந்தால் லாபம் நிச்சயம்.

No comments:

Post a Comment