Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 6, 2015

சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!


அவைச உணவை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவ்வாறு அவைச உணவுகள் சாப்பிடாமல், முதன் முறையாக அசைவ உணவுகளை சாப்பிட போகிறவர்கள் சிக்கனைத் தான் முதலில் சுவைப்பார்கள்.
ஏனெனில் சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. இறைச்சியில் எத்தனை வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பிடிக்கும். இத்தகைய சிக்கனில் ஆரோக்கியமும் உள்ளது, அதே சமயம் தீங்கும் நிறைந்துள்ளது. அவை அனைத்து நாம் சாப்பிடும் விதத்தில் தான் உள்ளது.


அதிலும் சிலர் சிக்கனை நாள் கணக்கில் வைத்து பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினால், உடலுக்கு கேடு தான் விளையும். மேலும் உறைந்திருக்கும சிக்கனும் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் நன்கு புதிதாக வாங்கப்பட்டு வரும் சிக்கனை சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை முற்றிலும் பெறலாம். குறிப்பாக சிக்கனை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், உடல்நலம் தான் பாதிக்கப்படும். ஆனால் அதை வேக வைத்து வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அவ்வாறு சிக்கனை சாப்பிட்டால் என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

தசைகளை வலுவடையச் செய்யும்

சிக்கனில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே பாடி பில்டர் போன்று தசைகள் வேண்டுமென்பவர்கள், சிக்கனை வேக வைத்து அதிகம் சாப்பிட வேண்டும்.

பசியை அதிகரிக்கும்

சிக்கனில் ஜிங்க் அதிகம் உள்ளதால், அது சரியான நேரத்தில் பசியை உண்டாக்கும். மேலும் இதனை சூப் செய்து குடித்தால் மிகவும் நல்லது.

ஆரோக்கியமான இதயம்

சிக்கனில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் இதில் நியாசின் இருப்பதால், அவை அந்த கொலஸ்ட்ரைலை குறைக்கும். எனவே சிக்கனை எண்ணெயில் பொரிக்காமதல், வேக வைத்து சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

சிக்கனில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிலும் அந்த சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.

குழந்தைகளின் வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் அமினோ ஆசிட் இருப்பதால், அதனை குழந்தைகள் சாப்பிட்டால், உயரமாகவும், வலுவாகவும் இருப்பார்கள்.

மூட்டுவலிகள்

சிக்கனில் செலீனியம் என்னும் சத்து நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள செலீனியம், பிற்காலத்தில் மூட்டுகளில் வலி ஏற்படுவதை தடுத்துவிடும்.

மனஇறுக்கம்

சிக்கனில் வைட்டமின் பி5 இருப்பதால், அவை நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகள், அழுத்தம், இறுக்கம் போன்றவற்றை குறைத்துவிடும். எனவே மனம் சற்று இறுக்கமாகவோ அல்லது அழுத்தத்துடனோ இருந்தால், அப்போது க்ரில்டு சிக்கன் சாப்பிட்டால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

மாரடைப்பு

சிக்கன் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனென்றால் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் குறைவாக இருந்தால், ஹோமோசிஸ்டைன் அளவு குறையும். அதன் அளவு குறைவதால், அது இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும்.

எலும்புகளை ஆரோக்கியமாக்கும்

சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனை

சிக்கனில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் சாப்பிட்டால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் பிரச்சனைகளான ஒருவித மனஅழுத்தம், வயிறு வலி போன்றவற்றை குறைக்கும். எப்படியெனில் மக்னீசியம் இரத்தத்தில் அதிகம் இருந்தால், அது அந்த நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும். மேலும் வயிறு வலி ஏற்படுவதையும் தடுக்கும்.

ஆண்களின் ஹார்மோன்

சிக்கனில் ஆண்களுக்கான சிறப்பான ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், இதில் ஜிங்க் இருப்பதால், அது ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைக்கும்.

No comments:

Post a Comment