Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 27, 2015

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்!!

தமிழர்களுடைய முக்கிய பண்புகளில் விருந்தோம்பலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு .அதுவும் உணவு உபசரிப்பின் போது, உட்கொள்ளும் உணவை வாழை இலையில்  உட்கொண்டால் தான், நம்மில் பலருக்கு "விருந்து" சாப்பிட்ட உணர்வு , தித்திப்பாக தொண்டையில் நிற்கும் .வாழை இலை எளிதில் மட்கும் பொருள் என்பதால் ,இது சுற்றுச்சூழலையும் எளிதில் மாசுபடுத்தாது .
 அதுமட்டுமல்ல, வாழை இலை ஒரு மிகச்சிறந்த நச்சு முறிப்பான் . நாம் உண்ணும் உணவில் பாக்டீரியாக்களின் பாதிப்பு பல நேரங்களில் இருப்பதனால்தான் விசேஷ காலங்களில் உணவு உண்ணுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க "வாழை -இலை"யைப் பயன்படுத்துவது என்பது நம் முன்னோர்களின் யுக்தி .இதனால்தான் அனைத்து விழாக்களிலும் வாழையிலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், நவீனமயமாக்கல் பலரை பிளாஸ்டிக் இலை,மெழுகு பூசப்பட்ட காகித்தத்தட்டு ஆகியவற்றில் சாப்பிட வைத்து விட்டது .இத்தகைய சங்கடங்களை தவிர்க்க ,"மாத்தி யோசித்த"  தேனி மாவட்டம், போடியைச்சேர்ந்த டி.நாகராஜா என்பவர் ஹோட்டல்கள்,விசேசங்களுக்கு, கடைகளுக்கு "ரெடிமேட் -இயற்கை வாழை இலைகளை" தயாரித்து விற்பனை செய்து வருகிறார்

தயாரிப்பு முறை :
வாழை இலைகளை விற்கும் இடங்களைப்பொறுத்து, வெவ்வேறு வடிவங்களில் டிசைன் செய்து, பேக்கேஜ் செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . முதலில் இறக்குமதி செய்யப்பட்டஇலைகளை,  அதன் அகலம் மற்றும் நீளத்திற்கு ஏற்றார் போல் தரம் பிரிக்கிறார்கள் .
வாழை இலைகள், அதன் அளவினைப்பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது .


தலைவாழை சாப்பாடு இலை (2 மடிப்பு) -22" *15" ,சாப்பாடு இலை( 1 மடிப்பு ) -22" *15", நுனி தலையற்ற இலை -22" * 12" , நடு நரம்புகொண்ட வட்ட இலை - 9" முதல் 15 " வரை விட்டம் கொண்டது. ஸ்நாக்ஸ் வட்ட இலை -7" மற்றும் இதே அளவில் டிபன் இலைகள் என பல வடிவங்களில் இலைகள் தயாரிக்கப்படுகின்றன .

ஒவ்வொரு இலைகளும் அதற்கேற்ற அச்சுக்களில் வைத்து வெட்டப்பட்டு,  வடிவமைக்கப்படுகிறது. 100 அல்லது 200 வடிவமைக்கப்பட்ட இலைகள் ஒரு பேக்கேஜ் என எடுத்துக்கொள்ளப்படுகிறது .

"மாத்தி யோசித்து" வெற்றிகரமாக இந்த பிசினஸை நடத்தி வரும்  'ஸ்ரீஇயற்கை வாழை இலை' நிறுவன  உரிமையாளாரான  டி .நாகராஜா கூறுகையில் ," என் அப்பாவிற்கு இலை விற்பனையில் 40 வருடம் அனுபவம் இருந்தது. நானும் அவருடன் சேர்ந்து வேலை செய்ததால் வாழை இலைகள் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது குறித்த யுக்திகள் தெரிந்தன. வித்தியாசமான முயற்சியில் இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நாங்கள் தமிழகத்தின் ,அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இலைகளை கொள்முதல் செய்கின்றோம். கடந்த ஒரு வருட பரிசோதனைமுயற்சியில் ,ஒவ்வொரு மாவட்டங்களின் இலைகள் எத்தனைநாட்கள் தாக்குப்பிடிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டோம் .
"வாழை இலை" அதிகமான வெயில் பட்டாலும், அதிக மழையில் நனைந்தாலும் கெட்டுவிடும் .வாழையிலைத்தொழிலில் பலநேரங்களில், அனுப்பும் வண்டி ஹீட்டின் காரணமாக அடிப்பகுதியில் வைத்த சில கட்டுக்கள் கெட்டுவிடுவது இயல்புதான். அதையெல்லாம் தாண்டிதான் இந்த பிசினஸை வெற்றிகரமாக செய்து வருகிறோம். இன்னும் ஒருமாதத்தில் ஒரு சேமிப்பு கிடங்கியையும் , இயந்திர அச்சுக்கள் கொண்ட பேக்டரியையும் துவங்கப்போகிறோம். இப்போது அச்சுகளை கொண்டுவேலையாட்கள்தான் இலைகளை வடிவமைக்கின்றனர் .

இந்த ஒரு வருட காலத்தில் எங்களிடம் 40 திறமையான வேலையாட்களை பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம் . இதனால் யூனிட் துவங்கியபின் ஆட்களை வேலைக்கு அழைப்பதற்கு சிரமம் இருக்காது . மேலும் எங்களுக்கு தற்போது விருதுநகர் ,மதுரை ,கோவை,சேலம் ,சென்னை
ஆகிய 5 இடங்களில் நேரடி விற்பனையாளர்கள் உள்ளனர் .அவர்களுக்கு மொத்தவிற்பனையில் 10% கமிஷன் தருகிறோம். இந்தியாவிலேயே முதல்முறையாக ,அனைத்து மாவட்டங்களுக்கும் வாழை இலை அனுப்புவது நாங்கள் மட்டும்தான் " என தங்கள் பிசினஸின் நுணுக்கங்களை பகிர்ந்தார்.

மாறிவரும் சமூக சூழலில் ,பாரம்பரியத்தொழில்களை விட்டுவிட்டு ,புதியத்தொழில் தொடங்கி கையை கடித்துக்கொள்ளும் நபர்கள் மத்தியில்,  தன் தந்தையின் தொழிலையே மாத்தியோசித்து அப்டேட்டாக பிசினஸ் செய்துவரும் போடிநாயக்கனூர் நாகராஜா கவனிக்கத்தக்கவர்தான். 

No comments:

Post a Comment