Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 18, 2013

தீபாவளி ஸ்பெஷல்: தீபாவளி லேகியம்



Diwali Special Legiyam - Food Habits and Nutrition Guide in Tamil தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய்விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது. சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
சீரகம் - 25 கிராம்
தனியா - 10 கிராம்
நெய் - 25 கிராம்
செய்முறை:
* தனியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* ஊற வைத்த தனியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.
* கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.
* பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.
 நன்றி கூடல்

No comments:

Post a Comment