Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 15, 2013

82 வயது பாட்டியின் வயிற்றில் 40 வயது 'கல்' குழந்தை

கொலம்பிகயாவைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்து 40 வயதான கல் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த மூதாட்டி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது மூதாட்டியின் அடி வயிற்றுப் பகுதியில் குழந்தை வடிவில் ஒரு கட்டி இருந்ததை கண்டறிந்தனர். அதனை ஆப்ரேசன் மூலம் அகற்றினர்.

40 ஆண்டுகள் வலி இந்த மூதாட்டி 40 ஆண்டு முன்னர் கருத்தரித்த போது அந்த கரு கருப்பையில் தங்காமல் வயிற்றுப் பகுதியில் தங்கியதால் அது கல்லாக மாறிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 40 ஆண்டு வயிற்று வலி முடிவுக்கு வந்தது. 11000 பேரில் ஒருவர் ஆண்டிற்கு 11000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இதுபோன்ற கல்குழந்தைகள் உருவாவது இயற்கைதான் என்றும் அவர் கூறினார்.
குழந்தை கருத்தரித்த பிறகு கரு பாதிக்கப்பட்டால் இவ்வாறு கருவில் உள்ள குழந்தை கால்சியம் அமில உப்புகளால் பாதிக்கப்பட்டு கல்லாக மாறிவிடுவது மிகவும் அரிதானது என்றும் அதற்கு அறிவியலில் லித்தோபிடியன் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் இதுபோன்று 290 சம்பவங்கள் மருத்துவத்துறையில் பதியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக மேடம் கோலம்பே சாத்ரி என்ற 68 வயது பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு அவர் 1582 ல் இறந்த பின் கல்குழந்தை அவருடைய வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அவர் 28 வருடங்களாக வீங்கிய வயிற்றுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்தார். அக்குழந்தை பிரான்ஸ் நாட்டு பணக்காரருக்கு விற்கப்பட்டு பின் பல கைகள் மாறி இறுதியாக டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டு அது அவருடைய மியூசியத்தில் வைக்கப்பட்டு பின் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது அடக்கம் செய்யப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

No comments:

Post a Comment