Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 20, 2013

கூந்தலுக்கு நலம் தரும் தேங்காய் பால்


பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாளலாம்.  கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. 

இவைகளை கொண்டு பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கையுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல்முறையே. தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதாரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். 

கூந்தல் பராமரிப்பிற்கு தேங்காய் பாலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.  தேங்காய் பாலில் புரதச் சத்தும் கொழுப்புகளும் வளமையாக உள்ளது. மேலும் அதில் மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தேங்காய் பாலில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. கூந்தல் வளர்ச்சி அதில் ஒன்றாக விளங்குகிறது. 

தேங்காய் பாலின் நன்மைகள் மேலோங்கி நிற்பதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களே. இது தலைமுடி உதிர்வையும் தடுக்கும். ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க தலைமுடி உதிர்வை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகையால் தேங்காய் பாலை கொண்டு ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலை நாம் பராமரிக்க முடியும். 

சீரான இடைவேளையில் புரோட்டீன் சிகிச்சையை மேற்கொண்டால் உங்கள் கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். இந்த சிகிச்சையின் மூலம் உங்கள் மயிர்த் தண்டில் புரதச்சத்து இறங்கி தலைமுடி வளர்ச்சிக்கு துணை புரியும். முடி உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு புரோட்டீன் சிகிச்சை பெரிதும் கை கொடுக்கும். 

மாதம் ஒரு முறையாவது இதனை மேற்கொண்டால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க போவது உறுதி. அழகு நிலையம் சென்று இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் ஏற்படும் செலவை நினைத்து பயந்தால் இதனை நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொள்ளலாம். 

புரோட்டீன் சிகிச்சை செய்முறை : 

மூலப்பொருட்கள்: - தேங்காய் பால், - முட்டை, எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய், ஆர்கான் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்கள் அனைத்தையும் சரிசமமாக கலக்கிக் கொள்ளுங்கள்.  

உங்கள் கூந்தலை சரி சமமாக இரண்டு பாகமாக பிரித்துக் கொண்டு, இந்த கலவையை வட்டவடிவில் தடவ வேண்டும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் இருந்தால் கூந்தல் வளர்ச்சி ஏற்படும். தேங்காய் பாலின் நன்மைகள் அதன் தூய்மையை பொறுத்தே அமையும். 

அதற்கு காரணம் இன்றைய கால கட்டத்தில் எந்த ஒரு தீவனச் சேர்க்கைப் பொருட்கள் இல்லாமல் அது ரெடிமேடாகவே சந்தையில் கிடைக்கின்றன. தேங்காய் பாலை நம் வீட்டிலேயே சுலபமாக தயாரித்து விடலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மூடி தேங்காயை எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக துருவிக் அதிலிருந்து பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். 

தேங்காய் பாலை நேரடியாகவே உங்கள் கூந்தலில் தடவி கொள்ளலாம். கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியாக உள்ளது. பெண்களின் கூந்தல் பராமரிப்பிற்கு தேங்காய் பால் ஒரு முக்கியமான மூலப்பொருளாக விளங்குகிறது.

No comments:

Post a Comment