Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 26, 2013

காற்றில் ஓடும் அதிசயக் கார்!


காற்றில் ஓடும் அதிசயக் கார்!

காற்றில் ஓடும் அதிசயக் கார்!

காற்றை பயன்படுத்தி சாலையில் ஓடும் பிளாஸ்டிக் காரை ஆஸ்திரேலிய தொழிலதிபரும் ரோமானிய நாட்டு தொழில்நுட்ப நிபுணரும் இணைந்து செய்து வெற்றி பெற்றுள்ளனர்.
லெகோ என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் துண்களை பயன்படுத்தி இந்தக் கார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சக்கரங்களை தவிர மற்ற அனைத்தும் பிளாஸ்டிக் துண்டுகளால் ஆனது. இந்த காரை செய்து முடிப்பதற்கு சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த காரில் காற்றால் இயங்கும் நான்கு என்ஜின்கள் உள்ளன. மொத்தம் 256 பிஸ்டன்கள் இருக்கின்றன. வண்டி நகர்வதற்கு வசதியாக இவை அனைத்தும் பிளாஸ்டிக் துண்டுகளால் மட்டுமே செய்யப்பட்டன.

இந்தக் கார் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான இளைஞர்களை பயன்படுத்தினால் எப்படி வெற்றிபெற முடியும் என்பதற்கு இந்தக் கார் ஒரு உதாரணம். இது உருவானதே சுவாரசியமான கதை.
சமூகவலைத் தளமான ட்விட்டரில் ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் சம்மாரிடினோ என்பவர் தெரிவித்திருந்த யோசனை ஆஸ்திரேலியா முதலாளி ஒருவருக்கு பிடித்திருந்தது. சம்மாரிடினோ ரோமானியா நாட்டைச் சேர்ந்த டீன் ஏஜ் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த யோசனையை செயல்படுத்துவதற்கு தேவையான பண உதவியை தன்னால் பெற முடியாது என்று புரிந்தது.
இதையடுத்து அவர் ட்விட்டரிலேயே ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒரு திட்டத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் தேவை. 20 பேர் தேவைப்படுகிறார்கள் என்று அதில் கூறியிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 பேர் பண உதவி செய்தனர். உடனே இந்தக் கார் உருவாக்கும் திட்டம் தயாரானது.
அதன்பிறகு 18 மாதங்கள் உழைப்பு மற்றும் ஏராளமான பணம் செலவு செய்து இந்த காரை உருவாக்கினார்கள். ரோமானியா நாட்டில்தான் இது உருவானது. சம்மாரிடினோவும் அவருடைய வர்த்தக கூட்டாளியான ராவ்ல் ஓய்டாவும் இணைந்தே செய்தனர். செய்து முடித்தவுடன் நிறைவு வேலைகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு பெருமளவு வேலைகள் செய்து முடிக்கப்பட்டன.
பின்னர், இந்தக் காரை மெல்போர்ன் நகரின் வெளிப்புற சாலையில் சோதனை ஓட்டம் விட்டனர். சாலையில் இது உடைந்து சிதறி பிளாஸ்டிக் துண்டுகள் சாலையில் சிதறிவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள். ஆனால், அதுபோல எதுவும் நிகழவில்லை.
இதுபோல் இன்னொரு கார் செய்வது இனி எளிது என்றாலும், இதைவிட புதிய பாணியில் செய்யவே விரும்புவதாக சம்மாரிடினோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment