Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 22, 2014

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்
மெகா ‘வைஃபை’ மண்டலம் உருவாக்கி உலக சாதனை

பாட்னா : பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் இப்போது ‘ஹைடெக்’ சாதனை படைத்திருக்கிறது. உலகிலேயே 20 கிமீ பரப்பு பகுதிகளில் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கி உள்ளது பீகார்.இனி பாட்னா நகரத்தில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் இருந்து தானாபூர் பகுதி வரை கிட்டத்தட்ட 20 கிமீ பரப்பு பகுதிகளில் எங்கும் இன்டர்நெட் இணைப்பு சரிவர கிடைக்கவில்லையே என்ற கவலையே கிடையாது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் இனி இலவச ‘வைஃபை’ வசதியை அனுபவிக்கலாம். எந்த கட்டணமும் கிடையாது.இதன் மூலம் உலக இன்டர்நெட் வரைபடத்தில் பீகார் இடம்பிடிக்கும் என்பது உறுதி. இன்டர்நெட் தகவல் மையத்தை திறந்து வைத்த முதல்வர் நிதிஷ் குமார் இந்த இலவச ‘வைஃபை’ வசதியையும் ஆரம்பித்து வைத்தார். பல பகுதிகளில் இந்த ‘வைஃபை’ வசதியை கொண்டு 100 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டத்தையும் அவர் துவங்கி வைத்தார்.

விழாவில் பேசிய நிதிஷ், ‘ராஜ்கிர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றார்.
பீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘வைஃபை’ மண்டலம் உலகிலேயே மிக அதிக பரப்பு பகுதிகளில் வசதியை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது.
இதுவரை சீனா தான் இந்த இடத்தை பிடித்து வைத்திருந்தது. அதுவும் வெறும் 3.5 கிமீ பரப்பு பகுதிகளில் தான் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கியிருந்தது. இதை விட பல மடங்கு பெரிய அளவில் பீகார் நிறைவேற்றி சாதித்துள்ளது.இந்த ‘வைஃபை’ மண்டலத்துக்கு உட்பட்ட 11 முக்கிய சாலைகளில் எந்த வாகனம் சென்றாலும், அதன் எண்ணை துல்லியமாக கண்காணிப்பு கேமரா மூலம் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட வாகனம் எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.பீகார் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஷாகித் அலி கான் கூறுகையில்,‘ பீகாரில் சுற்றுலா இடங்கள் எல்லாவற்றிலும் இலவச ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
முக நூல்

No comments:

Post a Comment