Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 22, 2014

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்
மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினரில் உள்ள பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.


சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையி லான அமர்வு, முன்னர் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி உரிய மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதுபோன்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முடிவு காணப் படும் வரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மாநிலத்துக் குள்ளாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்ததை சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சுட்டிக்காட்டினார்.

இதே பிரச்சினையில் பெரிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், குழப்பநிலையை தவிர்க்க தற் போதைய. வழக்கில் இந்த இடைக் கால உத்தரவின் ஆதாயத்தை நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கருதுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் வாதத்தை ஆட்சேபித்த மனுதாரர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் உள் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதுதான் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

4.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க 2012ம் ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன் றம் மறுத்தது. மேலும் சிக்கலும் பதற்றமும் மிக்க இந்த விவகா ரத்தை அரசு கையாளும் விதம் சரி யில்லை என்றும் கண்டித்தது.

சிறுபான்மை பிரிவினரில் சமூக, கல்வி ரீதியில் பின் தங்கிய மக் களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி 2011 டிசம்பர் 22-ம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு தற்போது வழங்கப்படும் 27 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை பிரித்து வழங்க இது வகைசெய்கிறது.

2012 மே 28-ம் தேதி நடந்த விசாரணையில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. அறிவுபூர்வமாக பரிசீலிக்காமல் மதத்தின் அடிப்படையில் சிறுபான் மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தி இந்து 

No comments:

Post a Comment