Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, February 17, 2014

திமுக செய்திகளை சுடச்சுட படிக்க புதிய வெப்சைட்

திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் கட்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. திமுக 10வது மாநில மாநாடு கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். 


என்ன உள்ளது? புதிய இணையதளத்தில் திமுக மாநில மாநாட்டு செய்திகள், அதன் வீடியோ உள்ளது. இது தவிர கருணாநிதியின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளன.
ஏற்கனவே ஒன்று திமுகவுக்காக ஏற்கனவே ஒரு இணையதளம் உள்ளது. மேலும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கும் தனித்தனியாக இணையதளங்கள் உள்ளன. இந்நிலையில் தான் புதிதாக ஒரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் திமுகவுக்கு என்று ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் உள்ளது. இது தவிர கருணாநிதியும், ஸ்டாலினும் ஃபேஸ்புக்கில் அவ்வபோது கருத்துகளை தெரிவித்து வருவதோடு, கட்சி குறித்த தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment