Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 27, 2014

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்


 
Tamil_News_146537423134
6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
சாதாரண தைலங்களில் கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துப்படுகிறது. இதை குதந்தைகளுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் போது பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதில், மிகவும் அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய தைலத்தை குழந்தைகளுக்கு தடவும் போது, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு அதிக கற்பூர தன்மை கொண்ட தைலத்தை பயன்படுத்துவதால், வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம். அதிலும், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷ பாதிப்பு ஏற்படும் போது, ‘சலைன் நேசல்’ என்ற உறிஞ்சும் சொட்டு மருந்தை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு பிற மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தில் கொண்டு போய் விடும்.

No comments:

Post a Comment