Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 25, 2014

வட்டிலப்பம்


தேவையான பொருட்கள்:…
முட்டை -15
சீனி – 2 1/2கப்
தேங்காய் டின் பால் – 400கிராம் or (தேங்காய் தலைபால் -2கப்)
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 சொட்டு
முந்திரி பாதாம் – தலா 10
ஏலக்காய் பொடி – 1ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றவும். சீனியினை மிக்ஸ்சியில் அரைத்து பொடி செய்யவும்.
இந்த கலவையினை மிக்ஸியில் ஊற்றி நுரை பொங்க அடிக்கவும். நன்றாக சீனி கரைந்து இருக்க வேண்டும். இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்
தேங்காய் பாலினை இந்த கலவையுடன் கலந்து நன்றாக கலக்கவும்
பாதாம், முந்திரியினை மிகிஸியில் போட்டு தூள் செய்யவும்.
இதனையும் முட்டை கலவையுடன் சேர்க்கவும்,
எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்
வட்டிலப்பம் செய்யும் பாத்திரத்தில் சுற்றி வரை நெய் தடவி அதில் இந்த கலவையினை ஊற்றவும்..
வேக வைக்கும் முறை:
குக்கரில் தண்ணீர் ஊற்றி வட்டிலப்பம் பாத்திரத்தினை மூடி போட்டு குக்கரை மூடி போட்டு 2 விசில் ஹையிலும், 15 நிமிடம் சிம்மிலும் வைத்து வேகவைக்கம்.
(இந்த கலவை வெந்ததா என்று சரி பார்க்க வட்டில்லப்பத்தில் கத்தியினை வைத்து பார்த்தால் ஓட்டாமல் இருக்க வேண்டும்) 1/2 மணி நேரம் கழித்து ஆறிய பிறகு ஒரு தட்டில் இந்த பாத்திரத்தினை திருப்பி வைக்கவும்.
விருப்பமான வடிவில் கட் செய்து பரிமாறவும். அதிக நேரம் வெளியில் வைக்க வேண்டாம். ஃப்ரிஜில் வைத்து ஜில்லுனும் பரிமாறலாம்
நன்றி: காயல் சமையல்

No comments:

Post a Comment