Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 27, 2014

முத்து ரகசியம்


முத்து ரகசியம்மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது என்கிறார்களே… அது உண்மை இல்லை. அது கவிஞர்களின் கற்பனை. உண்மை என்ன தெரியுமா-?
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான் முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள் கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும். அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது.

கடலின் அடியில் வாழும் முத்துச் சிப்பியினுள் செல்லும் சிறு மணல், சிப்பியின் உடலில் சிறு உறுத்தலை ஏற்படுத்தும். அந்த உறுத்தலின் விளைவாய் சிப்பியுள் சுரக்கும் சுரப்பு நீர் அந்த மணலின் மீது படியும். தொடர்ந்து சுரக்கும் சுரப்பு நீர் அடுத்தடுத்து படிந்து முத்தாக மாறுகிறது. ஆக, முத்து என்பது மணலின் மீது படியும் சிப்பியின் சுரப்பி நீரின் படிபமே -ஆகும்.
கடல் சிப்பிகளில் 100க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை 2.5 செ.மீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. பருவக்காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத்தள்ளும். முட்டையை விட்டு வெளியே வரும் போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.
ஜப்பானியர்கள் சிப்பியைப் பிரித்து அதனுள்ளேயே மணல் போன்ற உறுத்தும் பொருட்களை வைத்து சிப்பியை கடலில் வளர்த்து முத்துக்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனாலும் இயற்கையாக உருவாகும் முத்தக்கே மதிப்பு அதிகம். பிலிப்பைன்ஸ் தீவில் கிடைத்த வெண்மையான முத்தே உலகில் மிகப்பெரியது. இதன் நீளம் 25 செ.மீ, குறுக்களவு 13 செ.மீ. மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் கிடைக்கின்றன. அரேபியர்கள் பலர் கடலில் மூழ்கி முத்து எடுப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, மஞ்சள். நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment