Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 4, 2014

க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!


ன்றைய இளைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை நரை. காரணம் கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.
‘இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. நரைக்கும் கூட விடை இருக்கு’ என்கிற ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம், இயற்கையான பொருட்களை வைத்து நரைமுடிக்கு திரை போடும் வழிகளைச் சொல்கிறார்.
இயற்கையான முறையில் மருதாணி அரைத்துப் பூசினால், அது சிவப்பாகத் தெரியும் எனப் பெரும்பாலோனோர் விரும்ப மாட்டார்கள். ப்ளாக் ஹென்னாவை தயாரித்துப் பயன்படுத்தினால் இயற்கையான கூந்தலை போலவே உங்களது கூந்தல் அலை பாயும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. வீட்டிலே செய்வதும் எளிது.

பிளாக் ஹென்னா

தேவையானவை:
ஹென்னா - ஒரு கப்,
சூடான ப்ளாக் காபி - பேஸ்டாக மாற்றுவதற்கான தேவையான அளவு,
எலுமிச்சை சாறு - ஒரு பழம்
ஆப்பிள் சிடர் வினிகர் - 2 ஸ்பூன்,
முட்டை மஞ்சள் கரு - 1 (ஆப்ஷனல்)
ப்ளைன் யோகர்ட் - 2 அல்லது 4 ஸ்பூன்
இண்டிகோ (அவுரி பொடி அல்லது அவுரி இலை) - சிறிதளவு

செய்முறை: ஹென்னா பொடியுடன், சூடான ப்ளாக் காஃபி கலந்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊற வையுங்கள். எப்போது பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு முன் முட்டையின் மஞ்சள் கரு, யோகர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசி நன்கு உலர்ந்துங்கள். இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்டாக மாற்றி அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசுங்கள்.

கரு கரு கூந்தல், மென்மையாகவும், அழகாகவும் அலைபாயும்.

டார்க் ப்ரவுன் ஹென்னா

தேவையானவை:
ஹென்னா - 1 கப்
பட்டை பொடி - கால் கப்
சூடான ப்ளாக் காபி - பேஸ்டாக மாற்றுவதற்கான தேவையான அளவு
எலுமிச்சை சாறு - ஒரு பழம்
ஆப்பிள் சிடர் வினிகர் - 2 ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1 (விரும்பினால்)
ப்ளைன் யோகர்ட் - 2 முதல் 4 ஸ்பூன்
இண்டிகோ (அவுரி பொடி அல்லது அவுரி இலை) - சிறிதளவு

செய்முறை: ஹென்னா பொடியுடன், பட்டை பொடியை கலந்து சூடான ப்ளாக் காபியும், திராட்சை சாறும் கலந்து பேஸ்டாக மாற்ற வேண்டும். பிறகு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊற வையுங்கள். பயன்படுத்துவற்கு முன்பு, இண்டிகோவை தண்ணீரில் பேஸ்டாகக் கலந்து ஹென்னா பொடியுடன் கலந்து வைக்கவும். பிறகு முட்டை மஞ்சள் கரு, யோகர்ட்டை ஹென்னாவில் கலந்து, உடனே கூந்தலில் பூசி விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசுங்கள். டார்க் ப்ரவுன் கூந்தலுடன் வலம் வரலாம்.

இனி, ஹேர் டைக்குப் பை பை. ஹென்னாவுக்கு ஹை... ஹை!

No comments:

Post a Comment