Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 4, 2015

வெள்ளந்தி மனுஷன் விஜயகாந்த்


விஜயகாந்த்  குறித்து இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என்று எல்லாவற்றிலும், ரவுண்டுகட்டி ரவுஸ் பண்ணுவது தொடர்கதை யான சமாச்சாரம். குறிப்பாக 24 மணிநேர குடிமகனாக அவரை ஆளாளுக்கு தங்கள் பாணியில் வறுத்து எடுத்து வந்தார்கள். அவரது பாணியில் சொல்வதென்றால் 'ஏதோ பக்கத்தில் இருந்து ஊற்றிக் கொடுத்ததைப் போல"  அவரவர் கற்பனை கதைகளை கட்டிவிட்டனர். அப்படியே அவர் மதுப்பழக்கம் உடையவர் என்றாலும் அது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயமாகிவிடு கிறது. அப்படி இருக்கை யி்ல் அவரை மட்டும் குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல் எந்த வகையில் நியாயம். 

அடுத்து பத்திரிகையாளர்களிடம் கோபப்படும் ஒரு வீடியோவை அடிக்கடி ஒளிபரப்பி கிணடலடித்து வந்தனர். சினிமாவுக்கு நடிக்க வந்தபோது தனக்கு ஆதரவளித்த அந்தக்கால சினிமா பத்திரிகை யாளர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி கோயம்பேடு அருகில் இருக்கும் லீ கிளப்பில் சமீபத்தில் அழைத்தார். குடும்ப நலன்களை விசாரித்தார். ஈழத்தமிழர்கள் இன்னல்களை பல அரசியல் கட்சிகள் தங்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது, பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. 

அரசியக் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு சினிமா நடிகராக இருந்த காலத்திலேயே இலங்கை தமிழர்கள் இன்னல்கள் தீரும்வரை பிறந்தநாள் விழா கொண்டாட மாட்டேன் என்று சபதம் எடுத்தவர் விஜயகாந்த் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

பிரபாகரன் மீது கொண்ட பேரன்பு காரணமாக தனது 100-வது படத்துக்கு 'கேப்டன்  பிரபாகரன்" என்று பெயர் சூட்டினார். அதுமட்டுமல்ல. தனது முதல் மகனுக்கு அவர் நினைவாக பிரபாகரன் என்று  நாமகரணம் சூட்டி அழகு பார்த்தார். 

கருணாநிதி திரைப்படத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது அப்போது அ.தி.மு.க ஆட்சி  அந்த கால கட்டத்தில் மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பொன்விழா கொண்டாடினார். அப்போது  கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு மேடை சரிந்தபோது மேடையில் இருந்த பெண்களை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து காப்பாற்றியவர் விஜயகாந்த். அரசியல்வாதிகள் பலர் மேடைதோறும் செயற்கையாக  நடிக்கிறார்கள், உயிரோட்டமே இல்லாத  ரெடிமேட் சிரிப்பை உதிர்க்கிறார்கள். சினிமாவில் கேமரா முன்பு நிற்கும்போது மட்டும் விஜயகாந்த நடிக்கிறார்.
பொதுவாக  கோபம் கொள்வதும், ஆவேசப்படுவதும் மனித இயல்பு. அரசியல் மேடைகளில் தனது உணர்வு களை மறைத்து வேஷம் போடத் தெரியாமல் இயல்பாக இருக்கிறார். அருகில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவரை கண்டித்து  கண்கள் சிவக்க கோபப்படுகிறார் அந்த கோபத்தைத்தான் வீடியோ பிடித்து எள்ளி நகையாடினர். பக்கத்தில் இருந்த மனிதர் செய்த தவறான செயல் ஏனோ அம்பலத்துக்கு வருவது இல்லை.

அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும்போது வெடித்து கண்ணீர்வழிய கதறி அழுதது பார்த்த தமிழர்கள் பலர் மனமாற்றம் கொண்டனர். ஏனென்றால் அந்த அழுகையில் கடுகளவுகூட போலித்தனம் இல்லை. அதுமட்டுமல்ல விஜயகாந்தின்  பரமவைரி என்று பலரால் சொல்லப்படும் அன்புமணியை வலியபோய் அன்பாக கரம்பிடித்து இழுத்து மேடையில் தனக்கு பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.
அடுத்து சீனியர் நடிகர் வினுச்சக்ரவர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருந்தபோது ஒடோடிப்போய் நலம்  விசாரித்தார் தைரியம் கொடுத்தார். வினுச்சக்ரவர்த்தியுடன் நிறைய படங்களில் நடித்த கதாநாயகர்கள் யாரும் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது வேதனையான உண்மை. 

மனித வாழ்வின் துயரமான தருணங்களில் பரிசுத்தமான அன்பு செலுத்துபவர்களின் பண்பு உலகுக்கு புலப்படும். இதோ இப்போதுதான் விஜயகாந்தின் வெள்ளந்தியான, நியாயமான கோபமும் உலகத்தின் கண்களுக்கு அப்பட்டமாய் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

- எம். குணா

No comments:

Post a Comment