Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 28, 2015

பூசணிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.


பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இதை உணவாக எடுத்து வரும் போது நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குணமடைகின்றன.

சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்தும்
பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், குக்குர் பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன.
இதன் விதைச் சூரணத்தை 2 முதல் 3 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் சிறுநீர் எளிதாகவும் மிகுதியாகவும் வெளியறே உதவுவதோடு புரோஸ்டேட் கிளாண்ட் வீக்கத்தைத் தடுப்பதற்கும் இது உதவுகிறது.
புற்று நோயை விரட்டும்
பூசணிக்காயின் விதைகளில் ஸ்டெரால் கிளைகோஸைட், ஸ்டெரால் அமிலக் கொழுப்பு ஆகிய வேதிப் பொருள்களும் அடங்கியுள்ளது. இது புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது.
தலைவலி பிரச்சனையை குணப்படுத்தும்
வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.
நாடாப்புழுவை கொல்லும்
பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியதாக இருக்கிறது. வெண்பூசணிக்காயை உலர்த்தித் தூளாக்கி சாப்பிட்டால் சளியுடன் ரத்தம் கலந்து வருகிற நோய்க்கு நிவாரணமாகிறது.
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் கீழ்பகுதியில் அடைப்போ அல்லது எரிச்சலோ ஏற்பட்டு கடுமையான வலியையும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிற நிலையில் உபயோகப்படுத்துகின்றனர்.
புதிய செல்கள் உற்பத்தி
வெண்பூசணிக் கொடியின் தண்டு, வெந்நீரினாலோ நீரின் ஆவியினாலோ ஏற்பட்ட கொப்புளங்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது. இதில் பொதிந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இதயக் கோளாறுகளை குணப்படுத்தும்
பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது. பூசணிக்காயில் துத்தநாகம் சத்து மிகுதியாக உள்ளது.
மலச்சிக்கலை குணப்படுத்தும்
பூசணிக்காய் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. இதில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்சிக்கல் ஏற்படா வண்ணம் உதவி செய்கிறது.
நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு
வெண் பூசணிச்சாறு ரத்தத்தைக் கட்டுபடுத்தக் கூடியது. பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் நுரையீரலினின்று கசியும் ரத்தம் தடுக்கப்படும். மேலும் சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளிப்படுவது தவிர்க்கப்படும்.

No comments:

Post a Comment