Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 28, 2015

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!


பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பச்சை இலைக் காய்கறிகள்: பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, அஸ்பாரகஸ், வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, போலிக் ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் பெண்கள் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தானியங்கள்: தானியங்களில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றம் வைட்டமின்கள் அமிகம் உள்ளது. மேலும் நிபுணர்களும் கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி,இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

நட்ஸ்: பெண்கள் நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில நட்ஸில் புரோட்டீ,ன மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் 10-15 பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது நலம்.

தயிர்: தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உணவில் பெண்கள் சேர்ப்பது, எலும்புகளை வலுவாக்கி, கால்சியம் குறைபாட்டை தடுக்கும்.

பெர்ரிப் பழங்கள்: கோடையில் பெர்ரிப் பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரித அதிகம் கிடைக்கும். பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். எனவே பெர்ரிப் பழங்களை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

No comments:

Post a Comment