Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 26, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(5)


கடலலையின் ஆக்ரோஷம்...

#################################################

இந்த நேரத்தில் தமிழக அரசை அதாவது ஜெயலலிதாவை யாரும் விமர்சிக்க வேண்டாம்...
‪#‎இது‬ பத்து நாள் முன்பாக தமிழக மக்களிடம் வைக்கோ மன்றாடி கேட்டுக்கொண்டது...!
ஜெயலலிதாவை யாரும் குறை கூற வேண்டாம், எல்லாத்துக்கும் காரணம் மோடி அரசு தான்....
#இது நாலு நாள் முன்னாடி மலேஷியா போய் உலக தமிழர்களிடம் வைக்கோ மன்றாடி கேட்டுக்கொண்ட போது...!!
ஜெயலலிதாவை விமர்சிக்க வேண்டாம், ஜெயலலிதாவை குறை சொல்ல வேண்டாம்... என்று கூறுவதன் மூலம், விமர்சிக்கவே வாய்ப்பில்லாத ஆட்சியைத் தந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவை, குற்றம் குறை ஏதும் இல்லாத ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை எதிர்த்து ஏன் மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் அரசியல் செய்ய வேண்டும்? அதிமுகவுடனேயே கூட்டணி அமைத்து செயல்படலாமே? (பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு!)
#இது அப்பாவி பொது ஜனத்தின் மைண்ட் வாய்ஸ் கேள்வி..!!!
கொக்கரக்கோ சௌம்யன்

#########################################################
இந்தியாவை விட்டு நானோ எனது மனைவியோ எந்த கட்டத்திலும் வெளியேறப் போவதில்லை: ‪#‎அமீர்கான்‬

#################################################################
ஒரு திருமண வீடு களைகட்டியிருந்தது. பணக்காரன் வீட்டு திருமணம் என்பதனால் பெரிய மனிதர்கள் வந்திருந்தனர். மணமகன் தாலி கட்டியதும் மொத்த கூட்டமும் பந்தியை நோக்கிப் பாய்ந்தது.
பந்தியில் கூட்டம் குறைந்ததும் ஒரு இளைஞன் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது.
கிசுகிசுப்பாக அவரிடம் “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!” என்று கேட்டான்.
சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” என்றார் அவர்.
அந்த இளைஞனுக்கு ஞாபகம் வந்து விட்டது. சாப்பிட்ட பின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்த நபர் கிளம்புகையில் அந்த நபரிடம் இளைஞன் “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” என கேட்டான்.
அவர் சலித்து சொன்னார்,
“அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”
அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ...


###################################################
எத்தனை ஆடை வேண்டுமானாலும் வாங்குபவன் -பணக்காரன்
என்ன வாங்கலாம் என்று
யோசிப்பவன் -நடுத்தரம்
எப்படி ஆடை வாங்க முடியும் என்று நினைப்பவன் - ஏழை
********************************************************************************************************************
***************************************************************************************
யாராவது இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் கொல்வேன், இதுவே அமீர்கானுக்கும் எச்சரிக்கை --- பயங்கரவாதி ராஜ்தாக்ரே
பால்தாக்ரே என்ற பயங்கரவாதியின் வம்சம் ஆச்சே வேறு என்ன எதிர்பாக்கமுடிவும்.
இது எப்படி நடுநிலை பாயிஸ் smile emoticon லைட்டா தலைய காட்டிட்டு அப்புறம் எங்களுக்கே அட்வைஸ் செய்ற ஐடியாத்தானே ...
வந்து அட்வைஸ் செய்துட்டு போங்க

##############################################################
ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள ‘Search FYI’ வசதி
எவ்வளவு தேடுதல் பொறிகள் வந்தாலும் கூகுள் தேடுதல் பொறி தான் இதுவரை நிகரற்றதாக வெல்ல முடியாததாக உள்ளது. இந்த நிலையில் இப்போது ஃபேஸ்புக் சமூக தளத்தில் தேடுதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் ‘Search FYI’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் பொதுவாகப் பதிவிடப்பட்ட பதிவுகளை நேரடியாக தேடிப்படிக்க ஒரு தேடுபொறி வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இனி எல்லோரும் ஃபேஸ்புக்கிலும் பிடித்த விஷயங்களைத் தேடிப்படிக்க முடியும். கூகுள் எல்லோருக்கும் ஆண்டவர் என்றாலும் ஃபேஸ்புக் தான் இப்போதைக்கு அனைவருக்கும் கனவுலகம். தேவையென்றால் தான் கூகுள் மற்ற நேரமெல்லாம் ஃபேஸ்புக்தான்.
எனவே கூகுளுக்கு சவாலாக ஃபேஸ்புக் சர்ச் மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

##########################################################
நண்பனிடம் பேசுவது தனிமையிடம் பேசுவதுபோல,
எதை வேண்டுமானாலும் பேசலாம்..!😍

‪#‎அனுபவம்‬
############################################################### 
சாமீ.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ......

 #####################################################
ஆமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு # சிவசேனா
பி.ஜே.பி. யை இனி ஆட்சிக்கு வர விடக்கூடாதுன்னு நாம கஷ்ட பட வேண்டியதில்ல. இவங்களே வச்சி செஞ்சிருவாங்க.

No comments:

Post a Comment